28th August 2022 10:28:48 Hours
இராணுவ வழங்கள் தளபதி மேஜர் ஜெனரல் இந்து சமரகோன் அவர்கள் இலங்கை இராணுவ சேவைப் படையணி பாடசாலை, பொறியாளர் சேவை பயிற்சிப் பாடசாலை, வடமத்திய முன்னரங்கு பராமரிப்புப் பகுதி, இராணுவ தாதியர் பாடசாலை மற்றும் முல்லைத்தீவில் உள்ள வடக்கு முன்னரங்கு பராமரிப்புப் பகுதி ஆகியவற்றின் செயல்பாட்டு அம்சங்களைப் பற்றிய முதல் அனுபவத்தைப் பெறும் நோக்கத்துடன் அண்மையில் அவ்விடங்களுக்கு தனது விஜயத்தினை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, இராணுவ வழங்கள் தளபதி அந்த பயிற்சி பாடசாலைகளில் நிலவும் நிர்வாக மற்றும் பிற விடயங்களைக் கேட்டறிந்ததுடன், எதிர்பார்க்கப்படும் தரத்துடன் பொருந்தக்கூடிய படையினரின் தொழில்முறை திறன்களை மேலும் மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேட்டறிந்தார்.
வருகை தந்த மேஜர் ஜெனரல் இந்து சமரக்கோன் அவர்கள் ஒவ்வொரு இடத்திலிருந்தும் புறப்படுவதற்கு முன்னர் முன்னேற்றத்திற்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.