Header

Sri Lanka Army

Defender of the Nation

28th August 2022 10:32:49 Hours

111 வது பிரிகேடினரினால் நிவாரணப் பொதிகள் வழங்கள்

இராணுவத்தின் மேலும் ஒரு முயற்சியாக, தலகல ஸ்ரீ சித்தார்த்த தொண்டு நிறுவனத்தின் தலகல ஸ்ரீ சுமணரதன நாயக்க தேரர் மற்றும் சிங்கப்பூரின் Tan Ngak Buay & Kee Meng Lang தொண்டு நிறுவனத்தின் நெருக்கமான ஒத்துழைப்புடன் - கண்டி டோலுவ பகுதியில் வசிக்கும் வறிய குடும்பங்ளுக்கு 130 உலர் உணவுப் பொதிகள் வியாழன் (25) வழங்கப்பட்டன.

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 11 வது படைபிரிவு தலைமையகத்தின் கீழுள்ள 111 வது பிரிகேட் படையினரால் கம்பளை, டோலுவ பகுதியில் இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதுடன் இந்த விநியோக திட்டத்தில் பிரதிநிதி நன்கொடையாளர்கள் குழுவினரும் இணைந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் 111 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரோஹித ரத்நாயக்க, டோலுவ பிரதேச செயலாளர், டோலுவ உதவி பிரதேச செயலாளர், 111 வது பிரிகேட் சிவில் விவகார அதிகாரி மற்றும் பயனாளிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.