29th August 2022 13:00:17 Hours
கோப்பாய் பகுதியில் விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் கல்வி உதவிக்காக இராணுவத்தினால் நிர்மாணிக்கப்பட்ட சிமிக் பூங்காவிற்கு இராணுவத் தளபதி விஜயம் செய்தார். இப் பூங்கா அண்மைக் காலமாக அனைத்து வயதினர் மற்றும் உள்ளூர் மக்களுக்கும் மிகவும் பிரபலமான இடமாக மாறியுள்ளது.
சிமிக் பூங்காவின் செயல்பாட்டு அம்சங்களை யாழ் தளபதி மற்றும் 51 வது படைப்பிரிவின் தளபதி, மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து இராணுவத் தளபதி நெருக்கமாக பார்வையிட்டார்.
இராணுவத் தளபதியின் வருகையின் போது, யாழ்ப்பாணத்தின் பிரபல்யமான இரண்டு உதைபந்தாட்ட அணிகளுக்கிடையில் நட்புறவுப் போட்டி சிமிக் பூங்காவில் நடாத்தப்பட்டன. விளையாட்டின் முடிவில், இராணுவத் தளபதி வெற்றியாளர்களை வாழ்த்தியதுடன், சிமிக் பூங்காவில் இப்போட்டியில் கலந்துகொண்ட 35 இளைஞர்களுக்கு ஒரு சோடி காலணிகளை வழங்கினார்.
வருகை தந்த இராணுவத் தளபதியை 51 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அனில் உதய குமார அவர்கள் வரவேற்றார்.