26th August 2022 15:06:58 Hours
போர்வீரர்களால் தேசத்திற்காக ஆற்றப்பட்ட தியாகங்களை நினைவு கூர்ந்து, வியாழன் 18 ஆம் திகதி 'ஆர்யா அறக்கட்டளையின் "உதாரை ஒப" நிகழ்வானது, பனாகொடவில் உள்ள இராணுவ உடற்பயிற்சி கூடத்தில் நிரந்தரமாக காயமடைந்த போர்வீரர்கள் உயிரிழந்த முன்னால் போர்வீரர்களின் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் படையினர்களின் குடும்பத்தினர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் முதலாவது இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் படையினரால் முன்னெடுக்கப்பட்டன.
காயமடைந்த மற்றும் உயிரிழந்த போர்வீரர்களின் குடும்பங்களின் மன நலனை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த திட்டத்தில் முன்னாள் இராணுவத் தளபதிகளான ஜெனரல் சாந்த கோட்டேகொட (ஓய்வு) , ஜெனரல் தயா ரத்நாயக்க (ஓய்வு) ஆகியோர் கலந்து கொண்டதுடன் மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷ (ஓய்வு), ஊடக பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன, உளவியல் செயற்பாடுகள் பணிப்பாளர் பிரிகேடியர் டி.என்.மாஜித், பேராசிரியர் ராஜ் சோமதேவமூத்த,நடிகர் டக்ளஸ் ரன்சிங்க, டொக்டர் சமதி ராஜபக்ஷ, டொக்டர் லலித் பண்டார, திரு சரித் கிரியெல்ல, செல்வி புஷ்பா ரம்யானி சொஸ்யா, திரு ஷமேந்திரா விக்ரமஆராச்சி, இசையமைப்பாளர் ஜகத் விக்கிரமசிங்க, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் மத்தியில் திடமான மனநலம், நேர் சிந்தனை மேம்பாடு, சுற்றுச்சூழல் தொர்பான மேம்பாடு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக முதலாவது இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ரவீந்திர மீகமராச்சி அவர்கள் ஆர்யா அறக்கட்டளையுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.