26th August 2022 07:19:39 Hours
53 வது படைப்பிரிவின் கீழுள்ள 532 வது பிரிகேட் படையினர் 2022 ஓகஸ்ட் 21 ஆம் திகதி சந்துன்புர மாவனகம, ஹெனானிகல், பம்பரவன மற்றும் புஸ்சலவின்ன ஆகிய பிரதேசங்களில் உள்ள 35 வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை விநியோகிக்கும் பணியை முன்னெடுத்தனர்.
532 வது பிரிகேட் தளபதி விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க ‘யுதுகம’ தொண்டு நிறுவனமும் வேறு சில நன்கொடையாளர்களும் இந்த விநியோகத் திட்டத்திற்கான அனுசரணையை வழங்கினர்.
532 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சுமல் விக்ரமசேகர, நன்கொடையாளர்கள், சில சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.