Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd August 2022 19:38:05 Hours

இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் 30வது ஆண்டு நிறைவு விழா

தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி இராணுவத்தின் மிகவும் மதிப்புமிக்க முதன்மையான அதிகாரி பயிற்சி கல்லூரியாகும், இது 20 ஆகஸ்ட் 1992 அன்று பாராளுமன்ற சட்டத்தின் மூலம் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியாக நிறுவப்பட்டதுடன், மேலும் ஓகஸ்ட் 17 தொடக்கம் 20 வரை 30 வது முத்து ஆண்டு விழாவை கொண்டாடியது. இதன் போது இராணுவ சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதுடன் பல்வேறு ஆண்டு நிறைவு விழா கொண்டாட்ட திட்டங்களில், மத அனுஸ்டானங்கள், சமூகம் சார்ந்த திட்டங்கள் என்பனவும் காணப்பட்டன.

ஆரம்பமாக ஆகஸ்ட் 17 ஆம் திகதி தியத்தலாவை ஆதார வைத்தியசாலையை சுத்தம் செய்யும் முழு நாள் சிரமதான பணியில்நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவத்தினரின் பங்குபற்றினர். மறுநாள் (18) இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி தலைமையக வளாக புதிய கட்டிடத்தில் 'செத்பிரித்' (துன்வரு பிரித்த) பராயணம் இடம்பெற்றதுடன் எல்லேகம ஸ்ரீ சுமங்கலாராம விகாரையில் வசிக்கும் பத்து பௌத்த துறவிகளுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு ஆகஸ்ட் 19 காலை நடைபெற்றது.

அன்றைய தினம் (19) எல்லேகம ஸ்ரீ சுமங்கலாராம விகாரையின் பிரதம பிக்கு கதுருகாமுவே ரதனவங்ச தேரர், அர்கெடியா (முத்து மாரி) இந்து கோவிலின் குருக்கள் கே.ஆர் ரெங்கநாதன் சர்மா, பலாங்கொட கிராண்ட் ஜும்மா பள்ளிவாசல் மௌலவி இசேக் றிசாத் தியத்தலாவ கத்தோலிக்க தேவாலயத்தின் வண. அருட்தந்தை சாம் பெரேரா ஆகியோரின் தலைமையில் பல சமய நிகழ்வுகள் இடம்பெற்றன. இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் மறைந்த ஸ்தாபகர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் ஆசீர்வாதம் வழங்கப்பட்டன.

அன்றைய தினம் (19) நடைபெற்ற இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் நினைவுத் தூபியில் வீரமரணம் அடைந்த அனைத்து போர் வீரர்களையும் நினைவு கூரும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட கல்லூரி தளபதி மேஜர் ஜெனரல் நலிந்த நியங்கொட அவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினார். இதேவேளை, தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர் நீத்த வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவு மலரஞ்சலி செலுத்துவதில் பிரதித் தளபதி மற்றும் அனைத்து பிரிவுத் தலைவர்களும் இணைந்து கொண்டனர். பின்னர், கல்வியற் கல்லூரியில் பணியாற்றிய போது உயிரிழந்த சிவில் ஊழியர்கள் மற்றும் இராணுவ வீரர்களுக்கு சிறப்பு நலத்திட்டம் மூலம் ஏராளமான ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டன.

20 ஓகஸ்ட் 2022 அன்று நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதிக்கு இராணுவ மரியாதை செலுத்தப்பட்டதை தொடர்ந்து, ஆண்டுவிழா சிறப்பம்சங்கள் நிறைவிற்கு வந்தன. இராணுவ அணிவகுப்பு தொடங்குவதற்கு முன், வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவு தூபிக்கு மலர்வளையம் வைக்கப்பட்டது. வர்ணமயமான அணிவகுப்பில் அணிவகுப்பு கட்டளையாளர், இரண்டாம் கட்டளையாளர், அணிவகுப்பு நிறைவேற்று அதிகாரி மற்றும் நான்கு குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எட்டு அணிகள் அடங்கிய அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி நாட்டிற்கு ஆற்றிவரும் சிறப்பான சேவையையும், கல்வியற் கல்லூரியை தற்போதைய தரத்திற்கு உயர்த்த அனைத்து முன்னாள் தளபதிகள் மற்றும் அவர்களது அர்ப்பணிப்புள்ள குழுக்களின் சிறந்த பங்களிப்பையும் தளபதியின் உரையின் போது பாராட்டப்பட்டது.

சம்பிரதாய அணிவகுப்புக்குப் பிறகு, கல்வியற் கல்லூரி வளாகத்தில் தளபதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் கல்வியற் கல்லூரி வளாகத்தில் நாக மரம், டிராகன் பழமரம், கொய்யா மரக்கன்றுகள் நடப்பட்டன. கல்வியற் கல்லூரியின் தளபதி தலைமையில் அதிகாரிகள் மற்றும் படையினர்கள் உட்பட அனைவருக்குமான மதிய உணவுடன் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் ஆண்டு விழாவை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் மகிமை எப்பொழுதும் ஒப்பற்றதாகவும்,இருக்கும். 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்தின் விடியலுடன், 1949 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதி இலங்கை இராணுவம் உருவாக்கப்பட்டது மற்றும் தியத்தலாவ இலங்கை இராணுவத்தின் இராணுவப் பயிற்சிக்கான சிறந்த புவியியல் தளமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. எனவே, இராணுவ ஆட்சேர்ப்பு பயிற்சி நிலையம் நிறுவப்பட்டது, பின்னர் அது 1964 இல் இராணுவ பயிற்சி மையம் என பெயரிடப்பட்டது. 1972 ஆம் ஆண்டு அதிமேதகு ஜனாதிபதி வில்லியம் கொப்பல்லாவ அவர்களினால் இராணுவ பயிற்சி மையத்திற்கு நிறங்கள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அதிமேதகு ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் 21 ஜூன் 1997 அன்று ஜனாதிபதி வர்ணங்களை வழங்கினார். எவ்வாறாயினும், இது 20 ஆகஸ்ட் 1992 இல் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியாக மீண்டும் நியமிக்கப்பட்டது. இன்றைய நிலவரப்படி, இது பல்வேறு துறைகளில் மிகப்பெரிய மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்த இராணுவ பாடநெறியின் கற்கைகளில் பட்டங்கள், உயர் டிப்ளோமாக்கள் மற்றும் டிப்ளோமாக்களை வழங்குகிறது.