Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd August 2022 19:43:13 Hours

இராணுவ வேண்டுகோளின் பேரில், தலகல அறக்கட்டளையினால் 130 உலர் உணவு பொதிகள் வழங்கல்

மன்னார் மாவட்டத்தில் உள்ள பாலம்பிட்டி பிரதேசத்தில் பொருளாதார சிரமங்களுடன் மத்தியில் வசிக்கும் 130 பொதுமக்களுக்கு இராணுவத்தின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை (19) தச்சனமரமடு பொது மண்டபத்தில் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. இந்த திட்டத்திற்கான அனுசரணையானது வண தலகல சுமணரத்ன தேரரின் தலகல ஸ்ரீ சித்தார்த்த அறக்கட்டளை மற்றும் சிங்கப்பூரின் Tan Ngak Buay & Kee Meng Lang Foundation ஆகிய தொண்டு நிறுவனங்களினால் வழங்கப்பட்டது.

65 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசாத் எதிரிசிங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க, 652 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சஞ்சீவ வனசேகர மற்றும் 653 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் நாமல் சேரசிங்க, மற்றும் 24 வது கஜபா படையணி படையினர் ஆகியோரின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த விநியோகத்தில் 65 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசாத் எதிரிசிங்க நன்கொடையாளர்களின் பிரதிநிதிகளுடன் கலந்துகொண்டதுடன், ரூ.7500. மதிப்புடைய ஒவ்வொறு பொதியிலும் 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ சீனி, 1 கிலோ கோதுமை மா, 1 டின் மீன் மற்றும் ஒரு சோயா பக்கெட் உள்ளடங்கியிருந்தன.

அதே தெற்கை தளமாகக் கொண்ட அறக்கட்டளை நிறுவனம் நாடு முழுவதும் உள்ள ஏழை மக்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள படையினரின் ஒருங்கிணைப்புடன் அந்த நிவாரணப் பொதிகளை வழங்கியது.

இந் நிகழ்வில் 653 வது மற்றும் 652 வது பிரிகேட் தளபதிகள், சிவில் விவகார அதிகாரி, கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், படையினர் மற்றும் நன்கொடையாளர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.