Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd August 2022 19:31:59 Hours

652 வது பிரிகேட் படையினரால் பாடசாலை புத்தகப்பை வழங்கல்

கந்தானையைச் சேர்ந்த திரு எரங்க ஜயக்கொடியின் அனுசரணையுடன், 652 வது பிரிகேட் படையினர் நந்திகடல், முன்னிமுருப்பு கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள பின்தங்கிய பாடசாலைகளில் கல்வி பயிலும் வறிய மாணவர்களுக்கு 48 பாடசாலைப் பைகளை வழங்கினர்.

நந்திகடல் அரச தமிழ் கலவன் பாடசாலை மற்றும் முன்னிமுருப்பு ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான இந்த சமூகம் நலத்திட்டத்தினை 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் 2022 ஓகஸ்ட 19 அன்று ஏற்பாடு செய்தனர்.

இந்நிகழ்வில் 65 வது படைபிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரசாத் எதிரிசிங்க, 652 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சஞ்சீவ வனசேகர, 652 வது பிரிகேடின் சிரேஷ்ட அதிகாரிகள், சிவில் விவகார அதிகாரி மற்றும் 10 வது இலங்கை இலேசாயுத காலட்படையணியின் படையினரும் கலந்துகொண்டனர்.