Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd August 2022 18:44:23 Hours

இராணுவதின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாணவர்களுக்கான பூப்பந்தாட்ட போட்டி

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வியாழக்கிழமை (18) கிளிநொச்சியிலுள்ள நான்கு முன்னணி ஆண்கள் மற்றும் மகளிர் பாடசாலைகளில் உள்ள 64 பூப்பந்து வீர வீராங்கனைகள் பூப்பந்து போட்டியில் பங்குபற்றினர்.

கிளிநொச்சி மத்திய கல்லூரி, கிளிநொச்சி இந்து மகாவித்தியாலயம் மற்றும் கிளிநொச்சி புனித தெரேசா வித்தியாலயத்தைச் சேர்ந்த 20 வயதுக்குட்பட்ட மகளிர் மற்றும் ஆண்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இப்போட்டி வடமாகாண விளையாட்டுத் தொகுதி உள்ளக அரங்கில் ஆரம்பமானது.

கிளிநொச்சி பாடசாலை மாணவர்கள் மத்தியில் பூப்பந்து திறனை விரிவுபடுத்தும் நோக்கில் 57 வது படைப்பிரிவின் தலைமையகம் மற்றும் 571 வது பிரிகேட் தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டியின் பரிசளிப்பு விழாவில் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

பிராந்திய கல்வி அதிகாரிகளான மெசர்ஸ் பி வாசுதேவன் மற்றும் எம்.காந்தசெல்வம், கிளிநொச்சி விளையாட்டு அதிகாரி திரு.அனுரகாந்தன் , 57 வது படைப்பிரிவின் தளபதி, 571 வது பிரிகேட் தளபதி, பிரிகேட் தளபதிகள், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக சிரேஷ்ட அதிகாரிகள் , 57 வது படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.