Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd August 2022 18:42:10 Hours

இராணுவ அனர்த்த மீட்பு பயிற்சி மைய குழுவினரின் ஒத்துழைப்புடன் கழிவு நீர் அடைப்பு அகற்றல்

கம்பளை அட்டபேஜ் அனர்த்த மீட்பு பயிற்சி இராணுவ மையம் சம்பந்தப்பட்ட நகர சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் ஏனைய ஊழியர்களுடன் இணைந்து புதன்கிழமை (17) நாவலப்பிட்டி நகரில் கழிவுநீர் அடைப்பை அகற்றினர்.

கடும் மழை காரணமாக வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டதுடன் சீரற்ற காலநிலை காரணமாக கழிவுப்பொருட்கள் நீருடன் அடித்துச் சென்று பிரதான மழைநீர் செல்லும் வழிகள் தடுக்கப்பட்டன. இதன் காரணமாக ஹங்ரானோயாவில் உள்ள நீர் உந்தி மற்றும் சுத்திகரிப்பு நிலையம் பாதிக்கப்பட்டதனால் இராணுவத்தின் உதவியை நீர் சுற்றிகரிப்பு வாரியம் கோரியது.

கம்பளையில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே அவர்களிடம் இந்த தேவை குறித்து முன்வைக்கப்பட்டதை அடுத்து, இராணுவத் தலைமையகத்தின் நடவடிக்கை பணிப்பகத்தின் பணிப்பாளர் இந்த திட்டத்திற்கு உதவுமாறு அனர்த்த மீட்பு பயிற்சி இராணுவ மையத்திற்க்கு அறிவுறுத்தினார்.