Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd August 2022 18:45:21 Hours

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி களப்பயணம்

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல ஓகஸ்ட் 17 - 18 ஆம் திகதிகளில் 61 வது படைப்பிரிவுத் தலைமையகம், 613 வது பிரிகேட் தலைமையகம் மற்றும் அதன் கட்டளை அலகுகள் மற்றும் 612 வது பிரிகேட் தலைமையகம் மற்றும் அவற்றின் கீழ் உள்ள படையணிகளுக்கு களப் பயணங்களை மேற்கொண்டார்.

ஒவ்வொரு மையத்திலும், வருகை தந்த மேற்குத் தளபதி சமூக சேவைகள், பாதுகாப்பு, நலத் திட்டங்கள் மற்றும் ஏனைய தொடர்புடைய விடயங்கள் தொடர்பாக ஒவ்வொரு படையணிகளின் பங்கு மற்றும் பணிகள் குறித்து விரிவான விளக்கங்களைப் பெற்றார்.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் கடமையாற்றும் அந்தந்த படைத் தளபதிகள்,பிரிகேட் தளபதிகள், மற்றும் கட்டளை அதிகாரிகள் மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்லாவிடம் தனித்தனியான விளக்கங்களை வழங்கினர்.

இந்த இரண்டு நாள் பயணத்தின் போது படையினர் மத்தியில் உரையாற்றிய மேற்குத் தளபதி, படையினரின் ஒழுக்கம், மனித மேலாண்மை, பதட்டமான சூழ்நிலைகளில் கடமைகளைச் செய்தல், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல், பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுப்பது, வாகன விபத்துக்கள் மற்றும் பாதுகாப்பு மேம்பாடுகள் போன்றவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன் சமீப காலங்களில் அவர்களின் சேவைத்திறனை பாராட்டினர்.

அவரின் வருகையின் போது அந்த முகாம்களில் உள்ள வசதிகள், சமையலறை பாத்திரங்கள் மற்றும் அனைத்து உபகரணங்களையும் ஆய்வு செய்தார்.

61 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க, பிரிகேடியர் பொதுப்பணி, பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதி பிரிகேடியர் , மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக பிரிகேடியர் (ஒருங்கிணபை்பு) மற்றும் 61 வது படைப் பிரிவின் பல பதவி நிலை அதிகாரிகள் மேற்குத் தளபதியின் விஜயத்தின் போது அவருடன் இணைந்திருந்தனர்.