Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd August 2022 18:48:35 Hours

இராணுவத்தின் வீட்டுத் திட்டத்தின் கீழ் மற்றுமொரு வறிய குடும்பத்திற்கு ஒரு புதிய வீடு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே அவர்களின் பணிப்புரையின் பேரில் ஊனமுற்ற முன்னாள் போர்வீரர்கள், வீரமரணம் அடைந்த முன்னாள் போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள், சேவையாற்றும் இராணுவ உறுப்பினர்கள் மற்றும் வறிய சிவில் குடும்பங்களுக்கு மேலும் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளை இராணுவம் நாடு முழுவதும் முன்னெடுத்து வருகின்றது.

இத்திட்டத்தின் கீ்ழ் இராணுவ வீரர்களின் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் வடமத்திய மாகாணத்தில் மேலும் இரண்டு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டதுடன் கெபிதிகொல்லாவை, கனுகஹவெவவையில் வசிக்கும் மறைந்த சாதாரன சிப்பாய் டி.எஸ் சாந்தவின் குடும்பத்திற்கு நிர்மாணிக்கப்பட்ட முதல் வீட்டினை கையளிக்கும் விழாவில் சனிக்கிழமை (20) இராணுவத் தளபதி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.இத்திட்டமானது சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் பிரதி தளபதி பிரிகேடியர் அனில் பீரிஸின் ஒருங்கிணைப்புடன் முன்னெடுக்கப்பட்டது. அவரின் வேண்டுகோளிற்கிணங்க நுகேகொடையில் வசிக்கும் நன்கொடையாளரான திரு அஜந்த வாஸ் குணசேகர அவர்கள் மூலம் இந்த புதிய வீட்டை நிர்மாணிப்பதற்காக 1.1 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டது.

பிரதம அதிதியாக இராணுவத் தளபதியும் இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியின் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே அவர்கள் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மற்றும் பிரிகேடியர் அனில் ஆகியோருடன் இணைந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டதுடன், சமய சடங்குகளுக்கு மத்தியில் சுப நேரத்தில் அந்த புதிய வீட்டை இரணுவத் தளபதி திறந்து வைத்ததுடன், புதிய வீட்டின் திறப்பு பிரதம அதிதியினால் பயனாளிக்கு வழங்கப்பட்டது.

மறைந்த சாதாரன சிப்பாய் டி.எஸ்.சாந்தவின் பாரியாரான விதவை பெண் திருமதி சுசந்தி ரேணுகா, மற்றும் அவர்களது பிள்ளைகள் ஆகியோர் புதிய வீட்டின் சாவிகளை பெற்றுக்கொண்டனர். இதற்கிடையில், திருமதி ஜானகி லியனகே அவர்கள் பயனாளிக்கு வீட்டு அத்தியாவசியப் பொருட்களை பரிசாக வழங்கினார்.

அங்கு வருகைதந்த லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை, 21 வது படைப்பிரிவின் தளபதி மற்றும் 5 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோர் அன்புடன் வரவேற்றதுடன் மகாசங்க உறுப்பினர்களின் 'செத்பிரித்' பராயணங்களுக்கு மத்தியில் இராணுவத்தினால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டின் சாவி தளபதியினால் பயனாளிக்கு கையளிப்பட்டது.

வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க, 62 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராச்சி, 21 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்யங்க ஏரியகம, பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் பிரதித் தளபதி பிரிகேடியர் அனில் பீரிஸ், சிரேஷ்ட அதிகாரிகள், இரண்டு குடும்பங்களின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நிர்மாணப் பணிகளுக்குப் பங்களித்த படையினர் ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.