Header

Sri Lanka Army

Defender of the Nation

17th August 2022 17:35:37 Hours

12 வது (தொ) பொறியியலாளர் சேவைப் படையணி படையினர் அரச நிர்மாணப் பணிகளை 8 மாதங்களில் நிறைவு செய்தனர்

அரசாங்கத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்ட நிர்மாணப் பணிகளின் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் புதிய இரண்டு மாடி கட்டிடம் மற்றும் 800 மீட்டர் நீளம் கொண்ட வடிகால் , களுத்துறை வளலவிட்ட பொது மைதானத்திற்கான புதிய இரண்டு பார்வையாளர் மண்டபம், அனுராதபுரம் மத்திய கல்லூரியில் புதிய கட்டிடம், அதன் 800 மீற்றர் நீளமான கொண்ட வடிகால் மற்றும் கேகாலை பொத்தேனியகந்த வித்தியாலயத்தில் உள்ள பாழமையான பாடசாலை கட்டிடம் முழுமையான புனரமைப்பு ஆகிய திட்டங்கள் இராணுவத்தினால் முன்னெடுக்கப்பட்டன.

தொடர்ச்சியான தலைமை களப் பொறியியலாளர் மற்றும் இராணுவத்தின் தற்போதைய தலைமை களப் பொறியியலாளர் மேஜர் ஜெனரல் மஹிந்த ஜயவர்தன அவர்கள் அந்த திட்டங்களை நெருக்கமாக மேற்பார்வையிட்டதுடன் தேவையான நிதி மற்றும் பிற நிர்வாக விடயங்களுக்காக அரசாங்க நிறுவனங்களுடன் ஒருங்கிணைத்தார்.

அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட நிர்மாணம் மற்றும் புனரமைப்பு திட்டங்களில் இராணுவம் தீவிர பங்களிப்பாளராக இருப்பதால், அரசாங்கத்தின் பெரும் தொகை பணம் மீதப்படுத்தப்படுகின்றது. இராணுவத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்குவதன் மூலம், அந்தந்த நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்னதாகவே இத்திட்டங்களை படையினர் நிறைவு செய்தனர்.