Header

Sri Lanka Army

Defender of the Nation

15th August 2022 17:45:56 Hours

மறைந்த இந்திய அமைதி காக்கும் படை போர்வீரர்களை நினைவுகூறல்

1987 முதல் 1990 வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் எல்.டி.டி.ஈ பயங்கரவாதிகளுக்கு எதிரான 'ஆபரேஷன் பவன்' மற்றும் பிற நடவடிக்கைகளின் போது இந்திய அமைதி காக்கும் படையின் உயிர் நீத்த ஜவான்கள் (போர்வீரர்கள்) நினைவுகூரப்பட்டதுடன் அவர்களின் தியாகங்களை பலாலியில் உள்ள இந்திய அமைதி காக்கும் படையணி நினைவுத் தூபி வளாகத்தில் இன்று (15) முற்பகல் நினைவுகூரப்பட்டன.

இந்த நினைவேந்தல் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்துடன் இணைந்தது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இலங்கைக்கான இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைக்கான இந்தியத் தூதரகத் தூதுவர் திரு ராகேஷ் நட்ராஜ் மற்றும் யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தந்த விஜயசுந்தர ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

புனிதமான இவ் விழாவின் போது இந்திய அமைதி காக்கும் படை நினைவுத் தூபிக்கு மலர் வலையங்களை வைத்து, திரு ஸ்ரீ ராகேஷ் நட்ராஜ் மற்றும் மேஜர் ஜெனரல் சந்தந்த விஜயசுந்தர இருவரும் அந்த இந்திய அமைதி காக்கும் படை போர் வீரர்களின் நினைவாக அஞ்சலி செலுத்தினர்.

சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அதிகாரிகள், தூதரக பொது அலுவலக அதிகாரிகள் மற்றும் படையினர் இந்நினைவேந்தலில் கலந்துகொண்டனர்.