Header

Sri Lanka Army

Defender of the Nation

15th August 2022 16:10:14 Hours

இராணுவ நிர்வாக பாடசாலையினால் சீனகுடாவில் வசிக்கும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவி

இராணுவத்தின் ஒருங்கினைப்பில் களுத்துறை “அபி சொயன மனுஸசகம” 'Api Soyana Manussakama' (நாம் தேடும் மனிதாபிமானம்) அமைப்பு சீனக்குடா பகுதியில் வசிக்கும் ஐம்பது (50) கர்ப்பிணிப் பெண்களுக்கு அத்தியவசியப் பொருட்களை பதினோராம் (11) திகதியும் மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் சனிக்கிழமையும் (13) பயனாளிகளை திருகோணமலை இராணுவ வழங்கள் பாடசாலை வளாகத்திற்கு வரவழைத்து வழங்கப்பட்டது.

மேற்கூறிய அனுசரணையாளரிடம் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதற்கான உதவியை கோரிய இராணுவ நிர்வாக பாடசாலை தளபதி பிரிகேடியர் மேனக பெர்னாண்டோவின் முயற்சியைத் தொடர்ந்து இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பம்பரகிரியெல்ல, தேகந்துடுவ லேனகிரி ஆரண்ய சேனாசனாய (மடம்) பொறுப்பாளர் வண. மஹாகெஹெல்வல லக்கன தேரர், குழந்தைகள் பொருட்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை வழங்கப்படுவதற்கு முன்னர் பெண்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கினார்.

“அபி சொயன மனுஸசகம” ‘Api Soyana Manussakama’ அமைப்பின் ஸ்தாபகரான திரு அசோக ரவீந்திர, அமைப்பின் உறுப்பினர்கள், தலைமைப் பயிற்றுவிப்பாளர், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இராணுவ நிர்வாக பாடசாலையின் நிரந்தரப் பணியாளர்கள் ஆகியோர் இணைந்து அந்தப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பரிசுப் பொதிகளை வழங்கினர்.