Header

Sri Lanka Army

Defender of the Nation

15th August 2022 17:30:56 Hours

9 மற்றும் 6 வது தேசிய பாதுகாப்பு படையினரால் கடற்கரை தூய்மையாக்கல்

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 681 வது பிரிகேடின் 9 வது இலங்கைத் தேசிய பாதுகாவலர் படையணி படையினர் சுகந்திபுரம் மற்றும் உடையார்கட்டுப் பாடசாலைக்கு இடையிலான பாதையை சீர்செய்யும் பணிகளுக்காக வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்களுக்கு செவ்வாய்க்கிழமை (9) ஒத்துழைப்பு வழங்கினர்.

9 வது தேசிய பாதுகாப்பு படையணி கட்டளை அதிகாரி இந்த திட்டத்தை சிவில் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மேற்பார்வையிட்டார்.

இதேவேளை, முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 681 வது பிரிகேட்டின் 6 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை (9) வல்லை மடம் கரையோரப் பகுதியை துப்பரவு செய்யும் பணியில் சிவில் ஊழியர்களுடன் கைகோர்த்துக் கொண்டனர்.

6 வது இலங்கை தேசியக் பாதுகாவலர் படையணி கட்டளை அதிகாரி இந்த நடவடிக்கையை மேற்பார்வையிட்டதுடன் சமூக சேவைகளை நிறைவேற்றுவதற்கு சிவில் ஊழியர்களுடன் ஒத்துழைக்க தனது படைகளுக்கு வழிகாட்டினார்.