15th August 2022 16:06:52 Hours
இராணுவ நிர்வாக பாடசாலை நிர்வாக பணியாளர் பாடநெறியின் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, பாடநெறி எண் - 8 ஐ பின்பற்றும் அதிகாரிகள் புதன்கிழமை (10) திருகோணமலை சீனக்குடா இலங்கை விமானப்படை கல்வியற் கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டனர்.
தூதுக்குழுவில் பாடசாலை தளபதி பிரிகேடியர் மேனக பெர்னாண்டோ, தலைமை பயிற்றுவிப்பாளர், சிரேஷ்ட பயிற்றுனர்கள், பாடநெறி கல்விசார் பணியாளர்கள் மற்றும் நிர்வாக பாடநெறி எண்-8 இன் அதிகாரிகள் ஆகியோர் இருந்தனர். இந்த விஜயத்தின் பிரதான நோக்கமானது, நிர்வாகம், கொள்வனவு, பொருட்கள், விநியோகச் சங்கிலி, களஞ்சிய முகாமைத்துவம், விநியோக நடைமுறைகள் போன்றவற்றில் அதிகாரிகளுக்கு நிர்வாகங்களை கையாளும் போது இலங்கை விமானப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் விதம் தொடர்பிலான அறிவை வளப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதாகும்.
வளாகத்திற்கு வந்தடைந்த இராணுவ நிர்வாக பாடசாலை தூதுக்குழுவை கனிஸ்ட கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி கட்டளை அதிகாரி அன்புடன் வரவேற்றார். குறூப் கெப்டன் டி.எம்.எஸ்.பி தசநாயக்க, இலங்கை விமானப்படை கல்வியற் கல்லூரி, கனிஸ்ட கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி ஆகியவற்றின் பொறுப்புக்கள் மற்றும் செயல்பாட்டு செயல்பாடுகள், விமானப் பயிற்சிப் பிரிவு மற்றும் விமானப்படையின் வழங்கல் முகாமை முறைமை ஆகியவற்றின் பங்கு மற்றும் பணிகள் ஆகியவற்றின் விளக்கக்காட்சிகள் மூலம் சமர்ப்பித்தார்.
இந்த விஜயத்தின் இரண்டாவது நிகழ்வின் போது, இராணுவ நிர்வாக பாடசாலையில் விமான பயிற்சி பிரிவு, உபகரணப் பிரிவு, எரிபொருள் பிரிவு மற்றும் விமானப்படையின் உணவகத்தினை அவதானிக்கும் தனித்துவமான வாய்ப்பு இராணுவ நிர்வாக பாடசாலை பிரதிநிதிகளுக்குக் கிடைத்தது.விஜயத்தின் போது விமானப்படை கல்வியற் கல்லூரி தனது அன்பான விருந்தோம்பலைக் காட்டியதுடன் அதிகாரிகளின் உணவகத்தில் மதிய உணவையும் வழங்கியது. இப் பயணத்தின் முடிவில் இராணுவ நிர்வாக பாடசாலை தளபதி விமானப்படை கட்டளை அதிகாரிக்கு நினைவுப் பரிசை வழங்கினார்.
இத்தகைய உள்ளூர் வருகைகள் பொதுவாக இராணுவ நிர்வாக பாடசாலை மூலோபாய இடங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன, இதனால் அதிகாரிகள் பரந்த வெளிப்பாடு மற்றும் முதல்-நிலை அறிவு மற்றும் வழங்கல் நடவடிக்கைகளின் பல்வேறு துறைகளின் தாக்கம், வாய்ப்புகள் மற்றும் முக்கிய செயல்பாடுகள் பற்றிய புரிதலைப் பெறுவார்கள்.