Header

Sri Lanka Army

Defender of the Nation

13th August 2022 18:21:17 Hours

573 வது பிரிகேடினரால் குத்துச்சண்டை வீரருக்கு பரிசு வழங்கல்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57 வது படைப் பிரிவின் 573 வது பிரிகேட் படையினர், கிளிநொச்சி மத்திய கல்லூரியைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை ஜெகனேஸ்வரம் விஜிதாவின் சாதனைகளை ஊக்குவிப்பதற்காகவும் பாராட்டுவதற்காகவும் அவருக்கு புதிய உபகரணங்களை பரிசாக வழங்கினர்.

இவர் சமீபத்தில், இந்திய குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

573 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரமித் பிரசன்ன, அந்த வீராங்கனையின் எதிர்கால பயிற்சிக்காக குத்துச்சண்டை கையுறைகள் மற்றும் குத்துச்சண்டை பயிற்சி பெறும் பைகள் ஆகியவற்றை தனது தனிப்பட்ட நிதியுதவில் வழங்கினார்.

கிளிநொச்சி மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் 57 வது படைப் பிரிவின் தளபதி பிரிகேடியர் சந்திமால் பீரிஸ், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிகாரிகள் முன்னிலையில் அவருக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.