Header

Sri Lanka Army

Defender of the Nation

10th August 2022 17:52:28 Hours

பதக்கம் வென்ற கோப்ரல் எச் பாலித பண்டார நாடு திரும்பினார்

பொதுநலவாய விளையாட்டுப் போட்டித் தொடரில் தட்டெறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்று கௌரவத்தையும் புகழையும் ஈட்டிய இலங்கை இராணுவப் பரா தடகள வீரர் கோப்ரல் எச்.ஜி பாலித பண்டார, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அன்பு வரவேற்புடன் திங்கட்கிழமை (8) நாடு திரும்பினார்.

2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கை இராணுவத்தின் தேசிய பாதுகாவலர் படையணி பரா தடகள வீரர் பாலித பண்டார தட்டெறிதல் F42-44/61-64 பிரிவில் 44.20 மீற்றர் தூரத்தை பதிவு செய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.