Header

Sri Lanka Army

Defender of the Nation

09th August 2022 21:00:28 Hours

மூன்றுமாத பாடநெறி புத்தல இராணுவ போர் கல்லூரியில் நிறைவு

புத்தல இராணுவ போர் கல்லூரியின் இரண்டாவது மூன்றுமாத பாடநெறியின் இறுதி நிகழ்வு சனிக்கிழமை (6) அதன் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றதுடன் பிரதம அதிதியாக இராணுவப் போர்க் கல்லூரியின் தளபதி பிரிகேடியர் வை.ஏ.பி.எம்.யஹம்பத் பிரதி தளபதியுடன் கலந்துகொண்டார்.

இந் பாடநெறியில் உயர் கட்டளை பாடநெறி 5, கனிஸ்ட கட்டளை பாடநெறி 24 மற்றும் கனிஸ்ட பணிநிலை பாடநெறி 22 ஆகியவற்றில் ஒரு பங்களாதேஷ் அதிகாரி உட்பட 143 அதிகாரிகள் பங்குபற்றினர்.

தலைமைப் பயிற்றுவிப்பாளர், சிரேஷ்ட பயிற்றுநர்கள், கல்விப் பிரிவுத் தலைவர், தொழிற்பாட்டு பணியாளர்கள் மற்றும் நிரந்தரப் பணியாளர்கள் பரிசளிப்பு விழாவைக் கண்டுகளித்தனர். பங்களாதேஷ் இராணுவ அதிகாரியுடன் கல்லூரியின் தளபதி நினைவுச் சின்னத்தையும் பரிமாறிக்கொண்டார்.

ஒவ்வொரு பாடப்பிரிவிலும் அதிக புள்ளிகளை பெற்ற அதிகாரிகளுக்கு தளபதியினால் சிறப்பு விருதும் வழங்கப்பட்டது.

உயர் கட்டளை பாடநெறி 5

முதலிடம்

மேஜர் டிகேஈ மடவள இலங்கை இராணுவ சிங்கப் படையணி

இராண்டாமிடம்

மேஜர் எஸ்எம்என்கேபீ செனவிரத்தன விஷேட படையணி

முன்றாமிடம்

லெப்டினன் கேணல் ஆர்.கே.கே பரகஹதந்த்ரீ இலங்கை இராணுவ கவச வாகன படையணி

கனிஸ்ட கட்டளை பாடநெறி 24

முதலிடம்

மேஜர் யூஏஎஸ்யூ உக்வத்த இலங்கை இராணுவ பீரங்கி படையணி

இராண்டாமிடம்

கேப்டன் எம்டி முந்தகீமுல் ஹக் ( பங்களதேஷ் இராணுவம்)

முன்றாமிடம்

மேஜர் பி.எம்.பி பன்னலகே கஜபா படையணி

கனிஸ்ட பணிநிலை பாடநெறி 22

முதலாமிடம்

கெப்டன் டீடி முதலிகே இலங்கை சிங்கப் படையணி

இரண்டாமிடம்

கெப்டன் டிஎம்எஸ்எம் திஸாநாயக்க விஷேட படையணி

மூன்றாமிடம்

கெப்டன் ஆர்ஏஎச்சீ ரூபசிங்க இலங்கை பீரங்கி படையணி