Header

Sri Lanka Army

Defender of the Nation

09th August 2022 20:00:28 Hours

படையினரால் மண்சரிவுகள் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைப்பு

நல்லதண்ணி - மஸ்கெலியா பிரதான வீதியில் பொதுமக்களுக்கும் வாகனப் போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்த மண்மேடு 11 வது படைப்பிரிவின் 112 வது பிரிகேட் படையினரால் வெள்ளிக்கிழமை (5) முற்றாக அகற்றப்பட்டது.

11 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கல்ப சஞ்சீவ அவர்களின் அறிவுறுத்தலில் 112 வது பிரிகேட் தளபதி கேணல் சந்திம குமாரசிங்கவினால் இப்பணி கண்காணிக்கப்பட்டது.

நகர அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்களின் உதவியுடன் 112 வது பிரகேடின் 19 வது (தொ) இலங்கை தேசிய பாதுகாப்பு படையினர் சில மணிநேரங்களில் இப் பணியை நிறைவு செய்தனர்.

19 வது (தொ) இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியின் ஒரு அதிகாரியும் 10 சிப்பாய்களும் அரச ஊழியர்களுடன் இத்திட்டத்தில் இணைந்து செயற்பட்டனர்.