Header

Sri Lanka Army

Defender of the Nation

09th August 2022 19:00:28 Hours

இராணுவ வளங்கல் தளபதி இலங்கை இராணுவ ஆயுத சேவை படையணி பயிற்சிப் பாடசாலைக்கு விஜயம்

இராணுவத் வளங்கல் தளபதி மேஜர் ஜெனரல் இந்து சமரக்கோன் ஆகஸ்ட் 3 ஆம் திகதி தொம்பகொட இலங்கை இராணுவ யுத்த உபகரண படையணி பயிற்சிப் பாடசாலையின் செயற்பாட்டு அம்சங்களைப் பார்வையிடுவதற்காக தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது, மேஜர் ஜெனரல் இந்து சமரகோன் அவர்கள், பாடசாலையின் தளபதி கேணல் நிரோஷன் வன்னசூரியவுடன் நிர்வாக விடயங்கள் மற்றும் பல்வேறு தொழிற்கல்வி கற்கைநெறிகள் மற்றும் அவற்றின் பாடத்திட்டங்கள் தொடர்பாக சுருக்கமான கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இவ் விஜயத்தின் போது இராணுவ வளங்கல் தலைமையகத்தின் சில சிரேஷ்ட அதிகாரிகளும் உடனிருந்தனர்.