Header

Sri Lanka Army

Defender of the Nation

09th August 2022 20:30:28 Hours

111 வது பிரிகேட் படையினர் லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவவை நினைவு கூர்ந்து இரத்த தானம்

திங்கட்கிழமை (8) இடம்பெற்ற லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் 30 வது நினைவு தினத்திற்கு இணையாக 11 வது படைப்பிரிவின் 111 வது பிரிகேட் படையினர் திங்கட்கிழமை (8) கண்டி தேசிய இரத்த வங்கி வளாகத்தில் இரத்த தான நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.

அதிகாரிகள் உட்பட மொத்தம் 74 படையினர் தானாக முன்வந்து இரத்த தானத்தில் கலந்து கொண்டு ஒன்பது இராணுவ வீரர்களுடன் 1992 இல் அராலி முனையில் தனது இன்னுயிரை தியாகம் செய்த புகழ்பெற்ற போர் வீரரின் நினைவை நினைவுகூர்ந்தனர்.

11 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கல்ப சஞ்சீவ இத் திட்டத்திற்கான வழிகாட்டுதல்களை ஒருங்கிணைத்து வழங்கினார். இந் நிகழ்வினை இரத்த வங்கியின் அதிகாரிகள் பாராட்டினர்.