Header

Sri Lanka Army

Defender of the Nation

10th August 2022 16:00:08 Hours

லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் 30 வது நினைவு தினம்

மகத்தான மற்றும் சிறந்த சமகால போர்வீரர்களில் ஒருவரான லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் 30வது நினைவு தினத்தை முன்னிட்டு அனுராதபுரத்தில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வின் போது, சக இராணுவத்தினர், படைவீரர்கள் மற்றும் இலங்கை மக்கள் திங்கட்கிழமை (8) அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த போர்வீரனின் உயிர் உருவச் சிலைக்கு முன்பாக திங்கட்கிழமை இடம்பெற்ற முக்கிய நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கொண்டார்

இராணுவ இசைக்குழுவின் கம்பீரமான முழக்கங்களுக்கு மத்தியில், அன்றைய பிரதம அதிதி முதல் மலர் மாலையை அணிவித்து, முறையான இராணுவ மரியாதைகள் வழங்கப்படுவதற்கு முன்னர் அவரது பொன்னான நினைவுக்கு வணக்கம் செலுத்தினார். உயிரிழந்த லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற போர் வீரர்கள், இராணுவ செயலாளர், வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி , 21 வது படைப் பிரிவின் தளபதி, 212 வது பிரிகேட் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை கவசப் படையணி அதிகாரிகள் மற்றும் படையினர் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டனர்.பொதுமக்களும் உயிரிழந்த வீரருக்கு அஞ்சலி செலுத்தினர்.

விடுதலை புலிகளுடனான ஆரம்பகாலப் போர்களின் போது இலங்கை இராணுவத்திற்கு பல வெற்றிகளைப் பெற்றுத் தந்த லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, 1992 ஓகஸ்ட் 8 ஆம் திகதி யாழ்ப்பாண அராலி பிரதேசத்தில் இராணுவ கடமையில் ஈடுபட்டபோது சக இராணுவ மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன, ரியர் அட்மிரல் மொஹான் ஜயமஹா, லெப்டினன் கேணல் எச்.ஆர் ஸ்டீபன், லெப்டினன் கேணல் ஜி.எச். ஆரியரத்ன, லெப்டினன் கேணல் வைஎன் பலிபான, கமாண்டர் அசங்க லங்காதிலக, லெப்டினன் கேணல் நளின் டி அல்விஸ், லெப்டினன் கமாண்டர் சி.பி. விஜேபுர மற்றும் சிப்பாய் டபிள்யூஜே விக்ரமசிங்க ஆகியோருடன் உயிர்நீத்தார்.

லெப்டினன் ஜெனரல் கொப்பேகடுவவின் படையணியான இலங்கை கவச வாகன படையணி இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது.