Header

Sri Lanka Army

Defender of the Nation

06th August 2022 21:30:48 Hours

நிரவிய இராணுவ பண்ணையில் பிராய்லர் கோழி உற்பத்தி ஆரம்பம்

இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடைப் படையணி படையினர் இராணுவத்தினரின் போஷாக்கு தேவைகளை பூர்த்தி செய்யும் கோழி உற்பத்தி திட்டத்தின் முதற்கட்டமாக கடந்த புதன்கிழமை (03) இராணுவத்தினரால் நடத்தப்படும் நீரவிய பண்ணையில் 6,000 கோழிகளுடன் பிராய்லர் கோழிப்பண்ணையை ஆரம்பித்தனர்.

இராணுவத்தினரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு ஆதரவாக, மின்னேரியா பிரதேசத்தில் அமைந்துள்ள உள்ளூர் கோழிப்பண்ணை நிறுவனமான எல்ஜி பார்ம் பிரைவட் லிமிடட் (LG Farm Private Ltd) மூலம் இத்திட்டத்திற்கு தேவையான கோழிகள், ஆலோசனைகள் மற்றும் சகல வசதிகளும் வழங்கப்பட்டன. இத்திட்டத்தின் முதல் கட்டம் வெற்றியடைந்ததையடுத்து, இரண்டாம் கட்டத்தின் கீழ் கோழிகளின் எண்ணிக்கை 8,000 ஆக உயர்த்தப்படும்.

பிராய்லர் தொழில்முறை என்பது கோழிகளை வளர்த்து இறைச்சி உற்பத்திக்கு தயார்படுத்தும் செயல்முறையாகும் நீரவிய இராணுவ பண்ணை இராணுவ வீரர்களின் நுகர்வுக்கு சிறந்த கோழி இறைச்சியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கோழி இறைச்சிக்கான அதிக தேவையை கருத்தில் கொண்டு, இந்த திட்டம் மூலம் நீண்ட காலத்திற்கு இராணுவ உறுப்பினர்களுக்கு கோழிகளை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.