Header

Sri Lanka Army

Defender of the Nation

05th August 2022 19:30:53 Hours

பிடிகல மற்றும் பெலவத்தை பொதுமக்களுக்கு இராணுவத்தினரால் நிவாரணப் பொதிகள் வழங்கல்

61 வது படைப்பிரிவின் 612 பிரிகேட் படையினர் மத்துகம பிடிகல மற்றும் பெலவத்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சனிக்கிழமை (ஜூலை 30) 'தில்ரு மற்றும் கலன மிதுரோ' அமைப்பின் அனுசரணையுடன் இராணுவ ஒருங்கிணைப்பின் மூலம் உலர் உணவுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.

612 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பந்துல காரியவசம் அவர்களின் மேற்பார்வையின் கீழ் 612 வது பிரிகேடின் 12 வது கள பொறியியல் படையினர் 61 வது படைப் பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க அவர்களின் வழிகாட்டுதலின்படி அந்த ஏழைக் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கினர்.

நன்கொடையாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய திருமதி வாசனா தில்ருக்ஷி விஜேசிறிவர்தன சமரசிங்க, 612 வது பிரிகேட் தளபதி, அதிகாரிகள் மற்றும் படையினர் இணைந்து அந்த உலர் உணவுப் பொதிகளை வழங்கினர். பிடிகலவில் அமைந்துள்ள 12 வது கள பொறியலாளர் படையணி வளாகத்தில் இந் நிகழ்ச்சி நடைபெற்றது.