04th August 2022 22:19:22 Hours
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் சம்பியன்ஷிப் 2022 இல் இலங்கை இராணுவ கிரிக்கெட் அணி இறுதிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
ஏ மற்றும் பி பிரிவுகளின் கீழ் நாடளாவிய ரீதியில் பல கிரிக்கெட் கழகங்கள் போட்டியிட்டதன் பின்னர் இறுதிப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை (2) ஆரம்பமாகியதுடன், இப்போட்டியில் பி பிரிவில் இராணுவ கிரிக்கெட் வீரர்கள் போட்டியிட்டனர்.
இறுதிப் போட்டியில் தமிழ் யூனியன் கிரிகட் அணியை எதிர்த்து எஸ்சீசீ மைதானத்தில் விளையாடிய இராணுவ அணி 49.5 ஓவர்களுக்கு 198 ஓட்டங்களை பெற்றது. டக்வொர்த் லூயிஸ் முறைப்படி தமிழ் யூனியன் துடுப்பாட்ட வீரர்கள் 37 ஓவர்களில் 153 ஓட்டங்களைப் பெற வேண்டியிருந்தது. அவர்கள் 31 ஓவர்களில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தனர்.
இறுதிப் போட்டியின் போது, அதிகாரவனையற்ற அதிகாரி - II அசேல குணரத்ன 59 ஓட்டங்களையும், சிப்பாய் மகேஷ் குமார 57 ஓட்டங்களையும் பெற்ற போதிலும் இராணுவம் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
அதேபோன்று இப் போட்டியின் போது லான்ஸ் கோப்ரல் எதிரிசிங்க 5 அரை சதங்கள் அடங்கலாக 483 ஓட்டங்களையும், சிப்பாய் மகேஷ் குமார தனது 3 அரை சதங்களுடன் 384 ஓட்டங்களையும் பெற்றுள்ளார். இந்த போட்டியில் சிப்பாய் எல் பெர்னாண்டோ 30 விக்கெட்டுகளையும், அதிகாரவனையற்ற அதிகாரி - II சேக்குகே பிரசன்ன 28 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இராணுவ கிரிக்கெட் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க மற்றும் அனைத்து உறுப்பினர்களும் இறுதிப் போட்டியில் இராணுவ அணியின் வெற்றிக்கு தேவையான ஊக்குவிப்புகளை வழங்கினர்.
இராணுவ கிரிக்கட் குழுவின் உப தலைவர் மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர, இராணுவ கிரிக்கட் குழுவின் செயலாளர் கேணல் டி.பி.எஸ்.ஐ டயஸ் மற்றும் இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் மேஜர் திஸர பெரேரா ஆகியோர் இராணுவ கிரிக்கட் வீரர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்கினர்.