Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd August 2022 17:00:10 Hours

613 வது பிரிகேட் படையினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்களுக்கு போக்குவரத்து உதவி

மாத்தறை கம்புருபிட்டியவில் உள்ள அடபான வைத்தியசாலை அதிகாரிகளின் அவசர வேண்டுகோளுக்கு அமைவாக மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 61 வது படைப்பிரிவின் கீழுள்ள 613 வது பிரிகேட் படையினர், சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் வைத்தியசாலைக்கு வருகை தந்த நோயாளிகளின் உறவினர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக கம்புருப்பிட்டி - முலட்டியான பிரதான வீதியின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து மற்றும் வாகன வசதிகள் இன்மை காரணமாக சுகாதார பணியாளர்கள் வைத்தியசாலைக்கு செல்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளதால் கம்புருப்பிட்டிய அடபான அரச வைத்தியசாலையின் பணிப்பாளரின் வேண்டுகோளுக்கமைவாக, 613 வது பிரிகேட் தளபதி கேணல் இந்திக ஜயவீர அவர்களினால் இராணுவ டிரக்குகள் மூலம் போக்குவரத்து உதவிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

படையினர் மூன்று நாட்களுக்கும் மேலாக ஜூலை 29ம் திகதி தொடக்கம் 31 வரையில் வெள்ள நீர் குறையும் வரை மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.