01st August 2022 22:45:40 Hours
விஷேட படையணியின் போர் டைவிங் பாடநெறி இலக்கம் -9 முடிவின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை (31) நாயாறு போர் டைவிங் பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்றது.
டைவிங் மற்றும் போர் டைவிங் திறன்களை ஊக்குவிக்கும் அதே வேளையில் நீர் மூலம் இயக்கப்படும் செயல்களின் தத்துவார்த்த மற்றும் நடைமுறை அம்சங்களைப் பற்றிய விரிவான அறிவை வழங்கும் பாடநெறி, தண்ணீருக்கு அடியில் நீந்துவதற்கு அவசியமான தந்திரோபாய திறன்கள் மற்றும் ஸ்கூபா டைவிங் நுட்பங்களைப் பெறுவதற்கும் இப்பாட நெறி வீரர்களுக்கு உதவுகிறது.
பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையின் தளபதியும், விஷேட படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்கள் கலந்துகொண்டு பாடநெறியை வெற்றிகரமாக முடித்தமை குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
அதே சந்தர்ப்பத்தில் போர் டைவிங் பாடத்தின் சிறந்த மாணவர்களுக்கும் தனி விருதுகள் வழங்கப்பட்டன. இந்த டைவிங் பாடசாலையானது ஜனவரி 2015 இல் திறக்கப்பட்ட பின்னர் 280 க்கும் மேற்பட்ட தகுதிவாய்ந்த ஆயுதப்படை நீச்சல் வீரர்களை உருவாக்கியுள்ளது.
இலங்கை விமானப்படையின் சிறப்புப் படையணியின் ஃப்ளைட் லெப்டினன் எஸ்.எஸ்.கே.எஸ்.என்.பி ரத்நாயக்க அவர்கள் பாடநெறியில் சிறந்த மாணவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த பரிசளிப்பு விழாவில் 58 வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் சந்திமால் பீரிஸ், விசேட பிரிகேட் தளபதி பிரிகேடியர் காஞ்சன வீரசேகர, விஷேட படையணியின் நிலையத் தளபதி கேணல் ரந்துனு பிரசாத், மற்றும் தலைமையக படையணியின் உறுப்பினர்கள் மற்றும் சிப்பாய்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.