01st August 2022 22:48:30 Hours
ஐக்கிய இராச்சியம் - பர்மிங்காமில் நடைபெற்று வரும் ' பொதுநலவாய விளையாட்டு 2022' இல் 2 வது (தொ) இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் இராணுவ பளுதூக்கும் வீரர் கோப்ரல் வயி.டி.அய் குமார, சனிக்கிழமை (30) நடைபெற்ற 55 கிலோ எடை பளுதூக்கும் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
‘பொதுநலவாய விளையாட்டு 2022’ அனைத்து பொதுநலவாய நாடுகளின் போட்டியாளர்களுடன் ஓகஸ்ட் 8 வரை தொடரும் இப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான இலங்கை இராணுவ வீரர்கள் பங்கேற்கின்றனர்.
2022 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை இராணுவ வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உட்பட 37 பேர் கலந்து கொள்வதுடன் நீச்சல், ஜூடோ, கூடைப்பந்து, கடற்கரை கரப்பந்து, கிரிக்கெட் (பெண்கள்), ரக்பி, குத்துச்சண்டை, தடகளம், பூப்பந்தாட்டம் மற்றும் பரா மல்யுத்தம், பரா மல்யுத்தம் மற்றும் பரிதிவட்டம் எறிதல் ஆகிய போட்டிகளில் பங்கேற்கும் வீர வீராங்கனைகள் கடந்த ஜூலை 25 அன்று இங்கிலாந்துக்கு புறப்பட்டனர்.
முழு தேசிய குத்துச்சண்டை அணியும் இராணுவ குத்துச்சண்டை வீரர்களால் மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதால் இராணுவத்தின் பங்கேற்பு இந்த முறை அதிக முக்கியத்துவம் பெறுகிறது.