Header

Sri Lanka Army

Defender of the Nation

01st August 2022 22:47:02 Hours

இராணுவ கிரிக்கெட் அணி இறுதி முதல் தர மேஜர் கிரிக்கெட் போட்டியில் தகுதி

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை இராணுவ கிரிக்கெட் அணி முதன்முறையாக 26 இற்கும் மேலான முதலாம் தர மேஜர் கிரிக்கெட் அணிகளை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

A & B ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் இந்த போட்டி நாடளாவிய ரீதியில் நடைபெற்றதுடன் இராணுவ வீரர்கள் B பிரிவில் போட்டியிட்டனர்.

காலிறுதிப் போட்டியில், ஜூலை 30 அன்று என்சிசி மைதானத்தில் ACE Capital CC அணிக்கு எதிராக இராணுவ அணி விளையாடி 123 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

இறுதிப் போட்டிகள் ஓகஸ்ட் 2 ஆம் திகதி தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்துடன் எஸ்எஸ்சீ மைதானத்தில் நடைபெறும்.

இராணுவ கிரிக்கெட் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்களுடன் அனைத்து உறுப்பினர்களும் இறுதிப் போட்டியில் இராணுவ அணியின் வெற்றிக்கு தேவையான ஊக்குவிப்புகளை வழங்கி வருகின்றனர்.

இராணுவ கிரிக்கட் குழுவின் உப தலைவர் மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர, இராணுவ கிரிக்கட் குழுவின் செயலாளர் கேணல் டி.பி.எஸ்.ஐ டயஸ் மற்றும் இலங்கை தேசிய கிரிகேட் அணியின் முன்னாள் விளையாட்டு வீரர் மேஜர் திசர பெரேரா ஆகியோர் இராணுவ கிரிக்கட் வீரர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்கினர்.

மேஜர் திசர பெரேரா, லான்ஸ் கோப்ரல் எல்.ஈ.கே எதிரிசிங்க, சாதாரன சிப்பாய் கே.டபிள்யூ.எஸ்.எல் பெர்னாண்டோ மற்றும் அதிகாரவனையற்ற அதிகாரி சீக்குகே பிரசன்ன ஆகியோர் போட்டியின் போது 28 விக்கெட்டுகளை வீழ்த்தி அணி இறுதிப் போட்டிக்குள் நுழையும் வரை சிறப்பாக விளையாடினர்.