Header

Sri Lanka Army

Defender of the Nation

01st August 2022 22:49:58 Hours

211 வது பிரிகேடினரால் விதவை குடும்பத்திற்கு புதிய வீடு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 21 வது படைப்பிரிவின் 211 வது பிரிகேடினரின் ஒருங்கிணைப்பின் மூலம் மெதவாச்சிய குடாவெவ பகுதியில் வசிப்பிடமாக கொண்ட இரண்டு பிள்ளைகளின் தாயாருக்கு புதிய வீடொன்று புதன்கிழமை (27) கையளிக்கப்பட்டது.

211 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமிந்த விஜயரத்ன அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மருத்துவ ஆலோசகர் வைத்தியர் (திருமதி) ரஞ்சனி செனவிரத்ன மற்றும் பொறியியலாளரும் வர்த்தகருமான திரு திலக் அழககோன் ஆகியோரினால் இந்த புதிய வீட்டை நிர்மாணிக்க 1.5 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது.

இத்திட்டம் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மற்றும் 21 வது படைப்பிரிவின் தளபதி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

இக்குடும்பத்தின் வருமை நிலையை 211 வது பிரிகேட் தளபதியின் கவனத்திற்குக் கொண்டு சென்றதை அடுத்து அனுசரணையாளர்களின் உதவியுடன் 211 வது பிரிகேடின் 2 வது (தொ) விஜயபாகு காலாட் படையணியின் படையினர் தங்களுடைய பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் திறன்களைப் பயன்படுத்தி சில வாரங்களுக்குள் இந்தப் புதிய வீட்டை நிர்மாணித்தனர்.

பயனாளியான விதவை தாயார் திருமதி எச்.ஏ இந்திராணி சோமலதா மற்றும் அவரது இரு பிள்ளைகளும் இணைந்து 211 வது பிரிகேட் தளபதியிடமிருந்து புதிய வீட்டுக்கான சாவியைப் பெற்றுக்கொண்டதுடன் இந்த நிகழ்வில் பயனாளியின் உறவினர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் பல அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.

இதே சந்தர்ப்பத்தில் வீட்டு தளபாடங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களும் இராணுவத்தினரால் ஊக்கத்தொகையாக குடும்பத்திற்கு பரிசாக வழங்கப்பட்டன.