Header

Sri Lanka Army

Defender of the Nation

30th July 2022 20:26:37 Hours

கிழக்கில் உள்ள விகாரைகளுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

கம்பஹாவை தளமாகக் கொண்ட ஒரு நன்கொடையாளரின் உதவியுடன் கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக படையினர் வெலிகந்த பிரதேசத்தில் உள்ள திம்புலாகல, கல்குடா, கடவத்மடுவ பகுதியில் அமைந்துள்ள விகாரைகளுக்கு செவ்வாய்க்கிழமை (26) உலர் உணவு பொதிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர்.

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்களின் வழிகாட்டலின் கீழ், கம்பஹாவைச் சேர்ந்த திரு.பிரசாத் லொகுபாலசூரிய அவர்களின் அனுசரணையுடன் கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினர். கிழக்கின் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால் ஒருங்கிணைக்கப்பட்ட 'ஷஸனலோக' நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இந்த செயற்திட்டத்தை முன்னெடுத்தனர்.

முதற்கட்டமாக, திம்புலாகல விகாரையில் உள்ள பௌத்த பிக்குகளுக்கு ரூ. 90,000.00 பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. மேலும் 233 வது பிரிகேட் பிரிவினரால் கல்குடாவில் உள்ள சிறி சீலாலங்கார பிரிவேனாவில் சேவையாற்றும் துறவிகளுக்கு ரூ. 45,000.00 பெறுமதியான உலர் உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன.

இதேபோல், கடவத்மடுவவில் உள்ள கடவத்மடுவ விகாரை வெலிகந்த விகாரையில் உள்ள பிக்குகளுக்கும் முறையே 25,000.00 மற்றும் 30,000 ரூபாய் பெருமதியான உலர் உணவுப் பொதிகள் தனித்தனியாக வழங்கப்பட்டன. இந்த விநியோகத்தில் நன்கொடையாளர் திரு பிரசாத் லொகுபாலசூரிய, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன ஆகியோர் பங்குகொண்டார்.

அந்தந்த விகாரைகளின் தலைமை விகாராதிபதிகள், பிரிகேடியர் ஒருங்கிணைப்பு பிரிகேடியர் கபில சக்ரவர்த்தி, சிவில் விவகார தலைமை இணைப்பாளர் கேணல் ராஜீவ் பெர்னாண்டோ, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கம்பஹா உடுகம்பொல பிரதேச நன்கொடையாளர்களான திரு.பிரசாத் லொகுபாலசூரிய, சமன் குணரத்ன மற்றும் ஆசிரி விஜேவர்தன ஆகியோர் இத்திட்டத்தில் கலந்துகொண்டனர்.