Header

Sri Lanka Army

Defender of the Nation

31st July 2022 15:21:50 Hours

12 வது படைப்பிரிவு படையினரால் கதிர்காம 'பாத யாத்திரை' பக்தர்களுக்கு தங்குமிட உதவி

ருஹுணு மஹா கதிர்காம தேவாலய திருவிழாவில் பங்கேற்பதற்காக கதிர்காமத்திற்கு செல்லும் குமண மற்றும் யால தேசிய பூங்காக்கள் வழியாக, வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து யாத்திரையை தொடங்கிய ஏறக்குறைய 5000 பக்தர்கள், கதிர்காமத்தில் யால தேசிய பூங்கா எல்லைக்குள் நுழைந்ததுடன் அவர்களுக்கான விருந்தோம்பல் ஏற்பாடானது மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 12 வது படைப்பிரிவின் கீழுள்ள 122 வது பிரிகேடின் 23 கஜபா காலாட் படையணியின் படையினரால் வெள்ளிக்கிழமை (ஜூலை 22) முதல் செய்யப்படுகிறது.

அரச நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் படையினரால் அந்த பக்தர்களுக்கு குடிதண்ணீர், சமைத்த உணவுகள், மருந்துகள் மற்றும் தற்காலிக தங்குமிடங்கள் வழங்கப்பட்டன. மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா அவர்கள் வழங்கிய வழிகாட்டுதல்களின் கீழ், 12 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் லங்கா அமரபாலவின் நெருக்கமான மேற்பார்வையினால் பக்தர்களுக்கு இந்த வசதிகளை வழங்க முடிந்தது.

122 வது பிரிகேட் தளபதி கதிர்காமத்தில் தங்கியிருக்கும் வேளையில் வருடாந்த எசல பெஹரா திருவிழாவிற்காக சில நாட்களுக்கு முன்னர் அங்கு வந்த அவர்களை கவனித்துக் கொள்ளுமாறு படையினருக்கு பணிப்புரை விடுத்தார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, பொத்துவில் மற்றும் அம்பாறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த அந்த பக்தர்கள் கொவிட் 19 தொற்று காரணமாக மூன்று வருடங்களின் பின்னர் யாத்திரையை மேற்கொண்டுள்ளனர்.