Header

Sri Lanka Army

Defender of the Nation

30th July 2022 20:23:04 Hours

இலங்கை இராணுவ கல்லூரி கெடட் அதிகாரிகள் இயந்திரவியல் காலாட் படையணி தலைமையகம் மற்றும் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு விஜயம்

இலங்கை இராணுவ கல்லூரியின் பிரிவு 91 மற்றும் பிரிவு 91 B இல் பாடநெறியினை தொடரும் 137 கெடட் அதிகாரிகள் அடங்கிய குழுவினர், தங்களது பயிற்சி பாடத்திட்டத்திற்கு அமைவாக திங்கட்கிழமை (25) தம்புலுஹல்மில்லேவ இயந்திரவியல் காலாட் படையணி தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டதுடன் யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு ஜூலை 27-28 ம் திகதிகளில் விஜயத்தினை மேற்கொண்டனர்.

இயந்திரவியல் காலாட் படையணி தலைமையகத்தின் நிலைய தளபதி பிரிகேடியர் ஏ.எம்.ஏ. அபேசிங்க அவர்கள், இயந்திரவியல் காலாட் படையணி தலைமையகத்திற்கு வருகை தந்த கெடட் அதிகாரிகளை வரவேற்று, இயந்திரவியல் காலாட் படையணி மற்றும் போர் வீரர்களின் நினைவுச்சின்னம் பற்றிய விளக்கத்தையும் அக்குழுவினருக்கு அளித்தார். பின்னர், எதிரிகளின் மறைவிடங்களைத் தாக்கும் முறை தொடர்பான செயல் விளக்ககாட்சியும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இறுதியாக, வருகை தந்த கெடட் அதிகாரிகள், அதிகாரிகளின் விருந்தகத்தில் பணிநிலை அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.இதனை தொடர்ந்து, கெடட் அதிகாரிகள் புறப்படுவதற்கு முன் இயந்திரவியல் காலாட் படையணி தலைமையகத்தின் நிலைய தளபதிக்கு நினைவுப் பரிசை வழங்கினர்.

மேலும் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கான விஜயத்தை மேற்கொண்ட கெடட் அதிகாரிகள் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவரகள் சார்பில், யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் ஷஷிக பெரேரா அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டனர்.

வருகை தந்த 134 இலங்கை கெடட் அதிகாரிகள் மற்றும் 3 வெளிநாட்டு கெடட் அதிகாரிகள் ஜாம்பியா மற்றும் மாலத்தீவினை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன். யாழ். குடாநாடு, அதன் தோற்றம் மற்றும் யாழ். பாதுகாப்பு தலைமையக படையின் வளர்ச்சி, யாழ். பாதுகாப்புப் தலைமையக படைகளின் பணிகள் மற்றும் பொறுப்புகள் குறித்து அவர்களுக்கு விரிவான விளக்கமளிக்கப்பட்டன. சிவில் மற்றும் இராணுவத்தினூடாக மேற்கொள்ளப்படும் ஒத்துழைப்புத் திட்டங்கள் மற்றும் சிவில் சமூகத்திற்கான இராணுவ உதவிகள் பற்றிய சுருக்கமான விளக்கக்காட்சியானது யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கேணல் பொதுப்பணி கேணல் கே.ஏ.புஷ்பகுமார அவர்களினால் விளக்கமளிக்கப்பட்டது.

இந்த விஜயத்தின் போது யாழ்.கோட்டை, யாழ் நூலகம், சங்குப்பிட்டி பாலம், இபிஎஸ் போர்வீரர் நினைவுச் சின்னம், மணல்காடு மணல் திட்டுகள், இலங்கையின் வடக்கே சாக்கோட்டை, வாலிபுரம் கோவில், டம்பகொலை பட்டுன பொன்னாலை மற்றும் கீரமலைக் குளம் ஆகிய இடங்களை வருகை தந்ந கெடட் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

மேலும் பிரிவு 91 இன் கெடட் அதிகாரிகள்,யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்களுக்கு நினைவுச் சின்னமொன்றை வழங்கி வைத்தனர். யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு வருகை தந்ததைக் குறிக்கும் வகையில், யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி, பிரிவு 91 இன் கெடட் அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு கெடட் அதிகாரிகளுக்கு நினைவுச் சின்னங்களையும் வழங்கினார்.