30th July 2022 20:19:49 Hours
இராணுவ பரா விளையாட்டுப் போட்டிகளுடன் இணைந்து இடம்பெற்ற இண்டர் படையலகுகளுக்கிடையிலான பரா உள்ளக ரோவிங் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையக பட்டாலியன் அணியினர், விஜயபாகு காலாட் படையணியின் தலைமையக படையலகு மற்றும் விசேட படையணி அணியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பெற்றுக்கொண்டதுடன் அவ்வணிகள் முறையே இரண்டாம் இடத்தைப் பிடித்துக் கொண்டன.
2022 ஜூலை 19-20 ஆம் திகதி வரை பனாகொட இராணுவ முகாமில் உள்ள உடற்தகுதி பயிற்சிப் பாடசாலையில் அணிகள் அல்லது ஜோடிகளாக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போட்டியில் 7 படையணி தலைமையகப் படையலகுகளின் 29 மாற்றுத்திறனாளி போர்வீரர்கள் போட்டியிட்டனர்.
போட்டி ஏற்பாட்டாளர்களான இலங்கை இராணுவ சமிக்ஞைப் படையணிப் படைத் தலைமையகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, தர உத்தரவாதம் மற்றும் ஆய்வுப் பணிப்பாளர் பிரிகேடியர் பிரியந்த தசநாயக்க அவர்களால் வெற்றியாளர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.