Header

Sri Lanka Army

Defender of the Nation

28th July 2022 21:13:55 Hours

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் விநியோகம்

கம்பஹாவை சேர்ந்த அனுசரணையாளரால் இராணுவத்திற்கு வழங்கப்பட்ட நிதி உதவியினைக்கொண்டு, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகமானது “மனுஷ்யத்வே சஹானா யாத்ரவ” சமூகத் திட்டத்தின் கீழ் ஒவ்வொன்றும் தலா ரூபா 5000/= மதிப்புடைய 200 உலர் உணவுப் பொதிகளை திங்கட்கிழமை (25) கிழக்கில் தோப்பிகல, கிளிவெட்டி, கிரில்லாவெளி வெலிகந்த, சிங்கபுர, செவனப்பிட்டிய மற்றும் கட்டுவன்வில ஆகிய பொதுப் பிரதேசங்களில் வசிக்கும் தகுதியுள்ள குடும்பங்களுக்கு வழங்கியது.

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கம்பஹாவைச் சேர்ந்த திரு.பிரசாத் லொகுபாலசூரிய இந்த நன்கொடையை வழங்கினார்.

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்களின் வழிகாட்டலின் கீழ் படையினரால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்தத் திட்டமானது முதலில் தொப்பிகல, கிளிவெட்டி மற்றும் கிரில்லாவெளி பகுதிகளில் உள்ள வரிய குடும்பங்களுக்கு 100 உலர் உணவுப் பொதிகள் 232 வது பிரிகேட் தளபதியுடன் இணைந்து விநியோகிக்கப்பட்டன.

இரண்டாம் கட்டமாக கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை சூழவுள்ள வெலிகந்த, சிங்கபுர, செவனப்பிட்டிய மற்றும் கட்டுவன்வில ஆகிய கிராமங்களில் உள்ள வரிய குடும்பங்களுக்கு மேலும் 100 உலர் உலர் உணவுப் பொதிகள் அன்றைய தினம் (25) பிரதம அதிதியான கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியின் பங்களிப்புடன் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இளநிலை பணிநிலை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிவில் விவகாரப் பிரிவு, ஒருங்கிணைப்புக்கான திட்டத்தை நெருக்கமாக மேற்பார்வையிட்டது. மேலும் பிரிகேடியர் பொது பணி பிரிகேடியர் சுஜீவ ஜயசிங்க,பிரிகேடியர் ஒருங்கிணைப்பு பிரிகேடியர் கபில சக்ரவர்த்தி, சிவில் விவகார பிரதம இணைப்பாளர் கேணல் ராஜீவ் பெர்னாண்டோ, பணிநிலை அதிகாரிகள் மற்றும் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.