Header

Sri Lanka Army

Defender of the Nation

28th July 2022 21:17:18 Hours

155 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கிளிநொச்சி நோயாளர்களுக்கு இரத்த தானம்

கிளிநொச்சி வைத்தியசாலை அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைவாக, முதலாவது படைத் தலைமையகம் மற்றும் அதனுடன் இணைந்த வழங்கள் பிரிவுகள், 57 வது படைப்பிரிவு, 66 வது படைப்பிரிவு, 4 வது இராணுவ புலனாய்வுப் படையணி, 5 வது இலங்கை கவச வாகன படையணியின் B படையலகு ஆகியவற்றில் உள்ள மொத்தம் 155 இராணுவ அதிகாரிகள் மற்றும் பிற சிப்பாய்கள் மற்றும் கிளிநொச்சி பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று திங்கட்கிழமை (24) கிளிநொச்சி பிரதேசத்தில் கடுமையாக நோய்வாய்ப்பட்ட நோயாளர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இரத்த தானம் வழங்கினர்.

கிளிநொச்சி வைத்தியசாலையின் பணிப்பாளரின் வேண்டுகோளுக்கு இணங்க, கிளிநொச்சி இராணுவ தள வைத்தியசாலையின் முதலாவது படையணியின் ஊழியர்களின் ஒத்துழைப்புடன் கிளிநொச்சி இராணுவத் தள வைத்தியசாலை வளாகத்தில் இரத்த தானம் ஏற்பாடு செய்யப்பட்டது.

கிளிநொச்சி இரத்த வங்கியின் வைத்திய அதிகாரி டொக்டர் (செல்வி) அச்சனா ஒப்ரிஸ் மற்றும் அவரது குழுவினர் மனிதாபிமான திட்டத்திற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்கினர்.

முதலாவது படையணி தலைமையகத்தின் நிர்வாகம் மற்றும் விடுதி பிரிகேடியர் அசேல அமரசேகர, கிளிநொச்சி இராணுவத் தள வைத்தியசாலையின் கட்டளை அதிகாரி மேஜர் எரந்த செனவிரத்ன ஆகியோர் முதலாவது படையணி தலைமையகத்தின் தளபதி வழங்கிய வழிகாட்டுதலின்படி இரத்ததான நிகழ்வை நெருக்கமாக ஒருங்கிணைத்து மேற்பார்வையிட்டனர்.

கிளிநொச்சியில் அண்மைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய திட்டங்களில் ஒன்றான இத்திட்டம் கிளிநொச்சியில் உள்ள சமூகம் மற்றும் மருத்துவத் துறையினரிடமிருந்தும் பாராட்டைப் பெற்றது.