Header

Sri Lanka Army

Defender of the Nation

28th July 2022 21:11:08 Hours

68 வது படைப்பிரிவின் தளபதியுடன் சுகந்திபுரம் மற்றும் வடக்கு உடையார்கட்டு பொதுமக்கள் கலந்துரையாடலில்

கிராம சேவை அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் பல்வேறு சமூகம் சார்ந்த அமைப்புக்கள் மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகள் குழுவினர் தமது அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு, சுகந்திபுரம் ஸ்ரீ முத்துஅம்மன் கோவில் சன சமூக நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட குழு கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்றது. இந்த கலந்துரையாடல் 68 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ரொஹான் பொன்னம்பெரும அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் போது எரிபொருள் நெருக்கடி, உரத் தட்டுப்பாடு, விவசாய சமூகத்தின் பயிர்ச்செய்கைக்கு தண்ணீர் இல்லாமை, போதைப்பொருள் பிரச்சினைகள், உடையார்கையு வீதி மற்றும் ரமேசன் கோவில் நிர்மாணம், முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் கிளிநொச்சி எல்லையில் உள்ள நிலங்களை விவசாயத்திற்காக எடுத்தல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சுகந்திபுரம் மற்றும் குளந்தபிலவ் பிரதேசங்களில் உள்ள மயான பூமி தொடர்பான பிரச்சினைகள், ஆகியவை பற்றி ஆராயப்பட்டன.

ஸ்ரீ முத்துஅம்மன் கோவில் மதகுரு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எம்.ஜெயகாந்தன், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய சார்ஜன் எஸ்.விக்ரமசிங்க, உடையார்கையு வடக்கு கிராமசேவை உத்தியோகத்தர் எம்.நிஷாந்தன், வனஜீவராசி உத்தியோகத்தர் என்.தினேஷ், மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் வி. பிரதீபன், 681 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் தம்மிக்க குணதுங்க, 68 வது பிரிகேட் பொதுப்பணி அதிகாரி கேணல் கோஷித பீரிஸ், 68 வது படைப்பிரிவின் ஒருங்கிணைப்பாளர் கேணல் சேனக முத்துக்குமாரண மற்றும் சில பொதுமக்கள் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.