Header

Sri Lanka Army

Defender of the Nation

28th July 2022 21:08:52 Hours

65 வது படைப்பிரிவின் நூலகத்தில் மறைந்த ‘மார்ட்டின் விக்கிரமசிங்க’ வாசகப் பிரிவு

‘மார்ட்டின் விக்கிரமசிங்க நூலாசிரியரின் 46 வது நினைவு தினத்தை முன்னிட்டு 'மார்ட்டின் விக்கிரமசிங்க அறக்கட்டளை' கடந்த 2022 ஜூலை 23 ஆம் திகதி, வவுனியா 65 வது படைப்பிரிவின் தலைமையகத்தில் உள்ள நூலகத்திற்கு அதிகளவான நூல்களை நன்கொடையாக வழங்கியதனையடுத்து அந்த நூலகத்தில் புதிய பிரிவாக 'மார்ட்டின் விக்கிரமசிங்க வாசகப் பிரிவு' என ஒரு பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஓய்வு நேரத்தில் அங்கு பணியாற்றும் இராணுவ வீரர்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் வகையில் 65 வது படைப்பிரிவின் நூலகம் நிறுவப்பட்டுள்ளது.

65 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசாத் எதிரிசிங்க அவர்கள் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒரு தொகை புத்தகங்களை பெற்றுக்கொண்டார்.