Header

Sri Lanka Army

Defender of the Nation

28th July 2022 21:21:45 Hours

24 வது படைப்பிரிவு படையினரால் வரிய குடும்பத்திற்கு வீடு மற்றும் வருமானம் ஈட்டும் சிற்றூண்டி உணவக ஏற்பாடு

சமூக அபிவிருத்தி வீடமைப்புத் திட்டத்தினை நடைமுறைபடுத்தும் முகமாகவும் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும் முயற்சியுடனும் அம்பாறை வடிநாகல பொதுப் பிரதேசத்தில் வசிக்கும் ஒரு வறிய குடும்பத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு மற்றும் வருமானம் பெற்று தரும் வகையிலான சாலையோர சிற்றூண்டி உணவகமும் (kiosk) திங்கட்கிழமை (25) திறந்து வைக்கப்பட்டன. இந்த திட்டமானது கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் கீழ் உள்ள 24 வது படைப்பிரிவு தலைமையகத்தின் 241 வது பிரிகேடினரின் முயற்சியினால் முன்னெடுக்கப்பட்டது.

24 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சாலிய அமுனுகம அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, வறுமையில் வாழும் திருமதி தீபானி சண்டலங்க அவர்களின் குடும்பத்திற்கு நன்கொடையாளர் டொக்டர் ஷனிக விஜயகுணசேகர மற்றும் களுபோவில- மாவட்டம்-306 A2 லயன்ஸ் கழகத்தின் உறுப்பினர்கள் இணைந்து வீடு நிர்மாணிப்பதற்கும் தளபாடங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் நிதியுதவி வழங்கினர்.

241 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சந்திர அபேகோன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 241 வது பிரிகேடின் கீழ் பணியாற்றும் 11 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படையினர் இந்த புதிய வீட்டை நிர்மாணிப்பதற்கான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப திறன்கள் மற்றும் மனிதவளத்தை வழங்கினர். மேலும் பயனாளியான திருமதி தீபானி சண்டலங்க அவரது குடும்ப உறுப்பினர்கள் கஷ்டங்களுக்கு மத்தியில் இதுவரை சரியான தங்குமிடம் அல்லது வருமான வழி இல்லாமல் இருந்துள்ளனர்.

திங்கட்கிழமை (25) சம்பிரதாயங்கள் மற்றும் சடங்குகள் மத்தியில் இடம்பெற்ற வைபவத்தின் போது புதிய வீடு மற்றும் அதை அன்டிய வீதியோரத்தில் வருமானம் ஈட்டும் முகமாக அமைக்கப்பட்ட kiosk உணவகம் ஒன்றையும் திறந்து வைக்கும் முகமாக நன்கொடையாளர் டொக்டர் ஷனிகா விஜயகுணசேகர பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

இத்திட்டத்தின் உந்து சக்தியான 24 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சாலிய அமுனுகம, 241 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சந்திர அபேகோன், 11 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரி, அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பயனாளிகளின் உறவினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இராணுவ அதிகாரிகள் இந்த விடயத்தை நன்கொடையாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து, குடும்பத்தின் அவல நிலையை கருத்தில் கொண்டு டொக்டர் ஷானிக விஜயகுணசேகர அவர்கள், நிர்மாண திட்டத்திற்காக சுமார் 1 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளார். மேலும், களுபோவில லயன்ஸ் கழகத்தினால் 500,000/= பெறுமதியான தளபாடங்கள் மற்றும் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வீடு கையளிக்கும் விழாவின் போது வழங்கப்பட்டது. புதிய வீட்டின் முன் குடும்பத்தின் அன்றாட வாழ்க்கைக்கு வருமானம் பெற்று தர உதவும் நோக்கில் படையினரால் சிறிய உணவகமும் அமைக்கப்பட்டுள்ளது.

11 வது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் தம்மிக்க வீரசிங்க, 241 வது பிரிகேடின் சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் திலக் குமாரசிறி, மற்றும் தம்மன பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் உட்பட பல அழைப்பாளர்கள் மற்றும் வடினாகல் கிராம மக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.