Header

Sri Lanka Army

Defender of the Nation

28th July 2022 23:10:19 Hours

ஒருங்கிணைந்த இலங்கை இராணுவத் தொண்டர் படையின் விளையாட்டு போட்டி & படையணிகளுக்கிடையிலான பரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஆரம்பித்து வைப்பு

இலங்கை இராணுவத் தொண்டர் படையின் ஒருங்கிணைந்த விளையாட்டுப் போட்டி, 23 வது இராணுவ பரா தடகளச் சம்பியன்ஷிப் மற்றும் படையணிகளுக்கு இடையிலான புதிய விளையாட்டுப் போட்டிகள் இன்று (27) காலை டயகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் அனைத்து போட்டிகளும் தனித்தனியாக ஆரம்பமானது.

நூற்றுக்கணக்கான இராணுவ விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்ட இந்த வருட மெகா நிகழ்வின் ஆரம்ப விழாவிற்கு பிரதம அதிதியாக இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு கலந்து கொண்டார்.

இலங்கை இராணுவத் தொண்டர் படையின் தளபதியும் இராணுவ தடகள குழு, இராணுவ பரா தடகள குழுவின் தலைவரும் மற்றும் ஸ்கை டைவிங் குழு தலைவருமான மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்கள், 'செனேஹச' கல்வி மற்றும் தகவல் மையத்தின் தளபதியும் மற்றும் இராணுவ பரா தடகள குழு பிரதித் தலைவரும் இராணுவ கரப்பந்தாட்ட குழு தலைவருமான பிரிகேடியர் ராஜா குணசேகர மற்றும் மாற்றுத்திறனாளி இராணுவ வீரர்களின் பிரதிநிதிகள் குழுவினர் இணைந்து அன்றைய பிரதம அதிதியை வரவேற்றதுடன், இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் இராணுவ பரா விளையாட்டுகளின் கொடிகள் ஏற்றப்பட்டிருந்த கொடி கம்பங்களை நோக்கி அவரை அழைத்துச் சென்றனர்.

அடுத்ததாக இடம்பெற்ற இராணுவ கீத பாடலின் பின்னர், வீரமரணம் அடைந்த அனைத்து போர்வீரர்களுக்கும் அவர்களின் விலைமதிப்பற்ற தியாகங்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மூன்று போட்டிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி, இராணுவ பரா தடகளக் குழுவின் பிரதித் தலைவரும் இராணுவ கரப்பந்தாட்டக் குழுவின் தலைவருமான பிரிகேடியர் ராஜா குணசேகர அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் பிரதம அதிதியினால் பலூன்கள் காற்றில் விடுவித்து நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேலும் அனைத்து விளையாட்டு வீரர்கள், போட்டியாளர்கள் மற்றும் நடுவர்கள் போட்டியின் விதிமுறைகளை பின்பற்றுவதாக உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

இறுதி கட்டமாக, இரண்டு நாள் (ஜூலை 27 - 28) விளையாட்டு தடகள நிகழ்வுகளின் தொடர்ச்சியைக் குறிக்கும் வகையில், இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு ஒலிம்பிக் சுடரை ஏற்றிவைத்ததுடன் ரிலே ஓட்டத்தினையும் ஆரம்பித்து வைத்தார்.

இந்த ஆண்டு கூட்டுப் போட்டியில் 700க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.