Header

Sri Lanka Army

Defender of the Nation

25th July 2022 18:12:58 Hours

"ஆரோக்கியமான இராணுவம் ஆரோக்கியமான தேசம்" நாள்கடந்த சிறுநீரக நோய் தொடர்பில் விளக்கம்

கொழும்பு இராணுவ மருத்துவமனையின் 'ஆரோக்கியமான இராணுவம்-ஆரோக்கியமான தேசம்' எனும் தொனிப் பொருளில் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நல்ல சுகாதார நடைமுறைகள், பொது சுகாதார முன்னெச்சரிக்கைகள், தடுப்பு மற்றும் குணப்படுத்துதல்கள் குறித்து இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் வழிகாட்டுதலின்படி ஜூம் தொழில்நுட்பத்தின் மூலம் புதன்கிழமை (20) மேலும் ஒரு செயலமர்வு நடாத்தப்பட்டது.

நாள்கடந்த சிறுநீரக நோய்கள் (CKDs) தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் இந்த நிகழ்ச்சியின் போது சிறுநீரக வைத்திய நிபுணர் கேணல் (வைத்தியர்) டி.எஸ் ஹெய்யன்துடுவ 'சிறுநீரக நோய்கள் மற்றும் தடுப்பு' தொடர்பாக விளக்கமளித்தார்.

விரிவுரைகள் நாடளாவிய அனைத்து பாதுகாப்பு படைத் தலைமையகங்களின், படைப்பிரிவுகள் மற்றும், பிரிகேட்களில் சேவை செய்யும் படையினர்களுக்கு நடாத்தப்பட்டது.