Header

Sri Lanka Army

Defender of the Nation

25th July 2022 18:04:16 Hours

கிழக்குப் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி 23 & 22 வது படைப்பிரிவு தலைமையகங்கள் மற்றும் ஆளுநர் அலுவலகத்திற்கு விஜயம்

கிழக்குப் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்கள் அண்மையில் 23 வது படைப்பிரிவின் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட போது 23 வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் ஷெவந்த் குலதுங்க அவர்கள் தளபதியை வரவேற்றார்.

பிரதான நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டு வருகை தந்த பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியை இராணுவ மரபுகளுக்கு இணங்க வரவேற்றார், அதன் பின்னர் அவருக்கு படைப்பிரிவின் தலைமையகத்தின் பணி நிலை அதிகாரிகளை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புனானி தலைமைச் செயலக கட்டிடத்தின் முன்பாக மாங்கன்று நடுவதற்கு தளபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

23 வது படைப்பிரிவின் தளபதி, 23 வது படைப்பிரிவு மற்றும் அதன் கீழுள்ள பிரிகேட்கள் மற்றும் படையலகுகளின் நோக்கம் மற்றும் பணிகள் , செயல்பாட்டு நிலை பற்றிய விரிவான விளக்கத்தை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி, படைப்பிரிவு தொடர்பான பாதுகாப்பு மற்றும் நிர்வாகப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார்.

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி தனது உரையின் போது, அனைத்து நிலைகளினதும் உயர் ஒழுக்கத்தைப் பேணுவதன் மூலம் இராணுவத்தின் பெயரை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன், நாட்டின் இந்த நெருக்கடியான சூழ்நிலையில் உகந்த செயல்திறனுக்கான தேவையையும் எடுத்துரைத்தார்.

அன்றைய பயணத்தை முடிப்பதற்கு முன், தளபதி தனது மதிப்புமிக்க எண்ணங்களை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டதுடன் வருகைக்கான ஞாபக சின்னமாக விருந்தினர் புத்தகத்தில் தனது பாராட்டுக்களையும் எண்ணங்களையும் எழுதினார்.

அதே வேளை, கிழக்குப் பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்கள் 2022 ஜூன் 6 முதல் 8 வரை 22 வது படைப்பிரிவு மற்றும் அதன் கட்டளையின் கீழுள்ள பிரிகேட்கள் மற்றும் படையலகுகளுக்கு விஜயம் செய்தார். 22 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சனத் அலுவிஹாரே அவர்களால் வழங்கப்பட்ட அன்பான வரவேற்புக்குப் பின்னர், படைப்பிரிவின் நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து படையினருக்கான உரை ஒன்றையும் நிகழ்தினார்.

அதன் பின்னர், தளபதி அவர்கள் 223 வது பிரிகேட் தலைமையகம் மற்றும் கட்டளைப் படையலகுகளுக்கு விஜயம் செய்து படையினர் மத்தியில் உரையாற்றினார். இந்த விஜயத்தின் போது மூதூரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கல்கந்த விகாரைக்கும் அவர் விஜயம் செய்தார்.

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி அவர்கள் திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு மரியாதை நிமித்தமான விஜயத்தையும் மேற்கொண்டார், அவர் 6 வது இலங்கை கவச வாகன படையணி, 221 வது பிரிகேட் தலைமையகம் மற்றும் அதன் கட்டளைப் படையலகுகளுக்கும் தனது விஜயத்தினை மேற் கொண்டிருந்தார்