25th July 2022 18:17:02 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 64 வது படைப்பிரிவின் 641 வது பிரிகேடின் 14 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினரால் பேராறு விநாயகம் முன்பள்ளி சிறுவர்களுக்கு அண்மையில் மதியநேர உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
படையினர்களால் ஒரு சமூகத் திட்டமாக தமது சொந்த நிதியைப் பயன்படுத்தி வழங்கப்பட்ட சுவையான மதிய நேர உணவை, பிள்ளைகள், பெற்றோர்கள் ஆசிரியர்கள் பெற்றுக் கொண்டனர்.
14 வது இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் அயி.எஸ் பிரசன்ன, இத்திட்டத்தை நெருக்கமாக மேற்பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் 14 வது இலங்கை சிங்கப் படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.