24th July 2022 20:00:16 Hours
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்கள் வடக்கு முன்னரங்கு பராமரிப்புப் பிரதேசம் மற்றும் அதன் வழங்கல் பிரிவுகளுக்கு 18 ஜூலை 2022 அன்று உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டார்.
வடக்கு முன்னரங்கு பாதுகாப்பு பிரதேசத்தின் தலைமையகத்திற்கு வருகை தந்த தளபதியை வடக்கு முன்னரங்கு பாதுகாப்பு பிரதேசத்தின் தளபதி பிரிகேடியர் ஏ.சி.ஏ டி சொய்சா அவர்கள் வரவேற்றதை தொடர்ந்து யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி தனது விஜயத்தினை மேற் கொண்டதை குறிக்கும் வகையில் தென்னங் கன்று ஒன்றை நாட்டியதுடன் அனைத்து படையினருக்குமான தேனீர் விருந்து ஏற்பாட்டிலும் கலந்து கொண்டார்.
அதைத் தொடர்ந்து, வடக்கு முன்னரங்கு பாதுகாப்பு பிரதேச தலைமையகத்தில் உள்ள அனைத்து வழங்கல் பிரிவுகளின் கட்டளை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடன் குழு புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டார்.
அதன் பின்னர், மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர இலங்கை இராணுவ போர்க்கருவி படையணி தலைமையகத்தின் 5 வது படையலகுக்கு விஜயம் செய்து அங்குள்ள படையினருடன் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன் இந்த விஜயத்தின் போது யாழ் தளபதி குழு புகைப்படத்தினை எடுத்துக் கொண்டதுடன் விஜயத்தின் நினைவு சின்னமாக மரக்கன்று ஒன்றையும் நாட்டினார்.
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப் பணி, பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் வழங்கல், வடக்கு முன்னரங்கு பாதுகாப்பு பிரதேசத்தின் தளபதி, அதிகாரிகள் மற்றும் படையினரும் இந்த விஜயத்தின் போது உடனிருந்தனர்.
இதேவேளை, யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்கள் 2022 ஜூலை 8, 9 மற்றும் 11 ஆம் திகதிகளில் 51, 52 மற்றும் 55 வது படைப்பிரிவுகள் பிரிகேட் மற்றும் படையலகுகளுக்கு தனது முதல் கள விஜயத்தை மேற்கொண்டார்.
அங்கு விஜயத்தை மேற்கொண்ட அவருக்கு இராணுவ மரபுகளுக்கு அமைவாக அந்த படைப்பிரிவுகளின் பிரதான நுழைவாயில்களில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் வருகை தந்த தளபதி படையினர்களுக்கான உரையின் போது இராணுவத்தின் ஒழுக்கமான சிப்பாயாக இருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
அந்தந்த தலைமையகங்களுக்கு அவர் வருகை தந்ததன் நினைவாக மரக்கன்றுகளை நட்டதைத் தொடர்ந்து உரையாற்றினார். அந்தந்த பிரிவுகளில் குழு புகைப்படம் எடுக்கவும் நிகழ்வுகளிலும் அவர் கலந்துகொண்டார்.
அதே காலகட்டத்தில் பல கட்டளை பிரிகேட்கள் மற்றும் பிரிவுகளுக்கு அவர் விஜயம் செய்தார்.
யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப் பணி, பிரிகேடியர் நிர்வாக மற்றும் விடுதி, பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர் இந்த விஜயத்தின் போது இணைந்திருந்தனர்.