24th July 2022 20:04:01 Hours
23 வது இராணுவ பாரா விளையாட்டுப் போட்டிகளுக்கு இணையாக கஜபா படையணியின் தலைமையகப் படையலகினால் ஏற்பாடு செய்யப்பட்ட படையணிகளுக்கிடையிலான பரா சக்கர நாற்காலி மற்றும் சைக்கிள் ஓட்டப் போட்டியானது, 2022 ஆம் ஆண்டு ஜூலை 3 அனுராதபுரம் ரம்பேவையில் நடைபெற்றது.
6 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், 9 சக்கர நாற்காலி போட்டியாளர்கள் மற்றும் 11 சைக்கிள் ஓட்டுநர் நிகழ்வுகளில் போட்டியிட்டனர். நிகழ்வுகளில் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் இங்கே:
சக்கர நாற்காலி மரதன்
கஜபா படையணியின் லான்ஸ் கோப்ரல் எச்.எம்.ரத்நாயக்க - முதலாம் இடம்
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கோப்ரல் டபிள்யூ.ஆர்.யு பிரியங்கிக - இரண்டாம் இடம்
கெமுனு ஹேவா படையணியின் லான்ஸ் கோப்ரல் ஜி.ஜி.எஸ் கலஹிதியாவ - மூன்றாம் இடம்
சைக்கிள் ஓட்டுதல் போட்டி
இலங்கை சிங்கப் படையணியின் கோப்ரல் ஜி.பி.ஐ.ஆர்.குமார - முதலாம் இடம்
கஜபா படையணியின் சார்ஜன் ஏ.ஜி.என்.வசந்த - இரண்டாம் இடம்
கெமுனு ஹேவா படையணியின் கோப்ரல் ஜே.எல்.ஜெயசிங்க - மூன்றாம் இடம்