Header

Sri Lanka Army

Defender of the Nation

24th July 2022 20:06:42 Hours

இராணுவத்தினால் விதைக்கப்பட்ட நெல் 23 வது படைப்பிரிவின் படையினரால் அறுவடை

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 23 வது படைப்பிரிவின் படையினரால் புனானியில் 17 ஏக்கர் கைவிடப்பட்ட வயல்களில் விதைக்கப்பட்ட 1000 கிலோகிரம் நெல் வியாழன் (21) பாரம்பரிய சடங்குகள் மற்றும் சடங்குகள் நிகழ்வின் பின்னர் அறுவடை செய்யப்பட்டது.

ஆரோக்கியமான உணவைப் பயிரிடுவதற்கான அரசாங்கத்தின் பசுமை விவசாய திட்டம் சில மாதங்களுக்கு முன்னர் பெரும் போக பருவத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது.

23 வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் ஷேவந்த் குலதுங்க அவர்களின் பங்குபற்றுதலுடன், அப்பகுதியிலுள்ள படையினர் மற்றும் விவசாய சமூகத்தினர் முன்னிலையில் அறுவடை வைபவம் ஆரம்பமானது.

அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அறுவடை விழாவிற்கு உதவினர்.