22nd July 2022 16:39:42 Hours
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 24 வது படைப்பிரிவின் 241 வது பிரிகேட் படையினர் செல்வி. கனிஷ்கா பீலவத்த, செல்வி. ஷசிகலா மற்றும் அவர்களது நண்பர்களின் ஒத்துழைபுடன் சனிக்கிழமை (16) அம்பாறை, பியசரகம பகுதி பொதுமக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் விநியோகிக்கும் திட்டத்தை முன்னெடுத்தனர்.
241 வது பிரிகேடின் 16 வது இலங்கை தேசிய பாதுகாவல் படையணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில் பியசரகம ஸ்ரீ சம்போதி விகாரைக்கு தேவையுடைய குடும்பத்தினர் மற்றும் மாணவர்களை அழைத்து தலா ரூ. 5500/= மதிப்புள்ள 80 உலர் உணவுப் பொதிகள் மற்றும் தலா ரூ. 600/= பணமும் வழங்கப்பட்டது.மேலும், அதே சந்தர்ப்பத்தில் 87 பாடசாலை மாணவர்களுக்கு கல்வி கற்பதற்காக ஊக்கமளிக்கும் வகையில் ரூபா 181,000/= பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன. நன்கொடை நிகழ்ச்சியின் முடிவில், நிகழ்வின் அனுசரனையாளரனினால் ஸ்ரீ சம்போதி விகதரையின் வளர்ச்சிக்காக 50,000/= தொகையை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட 24 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சாலிய அமுனுகம அவர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
241 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சந்திர அபேகோன் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை உன்னிப்பாகக் கண்காணித்ததுடன், கிராம சேவை அதிகாரிகள் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட பாடசாலை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தகுதியான பிரிவினரை தேர்ந்தெடுக்குமாறு 16 வது இலங்கை தேசிய பாதுகாவல் படையணியின் கட்டளை அதிகாரிக்கு பணித்திருந்தார்.