Header

Sri Lanka Army

Defender of the Nation

21st July 2022 19:53:41 Hours

இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தின் புதிய நுழைவாயில் திறப்பு

கொஸ்கம இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தலைமையகத்தின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நுழைவாயில் இன்று (21) காலை இடம்பெற்ற நிகழ்வில் திறந்து வைக்கப்பட்டது.இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பாவின் அழைப்பின் பேரில் இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில், பதாதை திரைநீக்கம் செய்யப்பட்டு, நாடா வெட்டப்பட்டு, பிரதான வாயில் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, இலங்கை இராணுவ தொண்டர் படையணித் தலைமையகத்தின் வளங்கல் பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் இந்து சமரகோன், பிரதம களப் பொறியியலாளர் மேஜர் ஜெனரல் மஹிந்த ஜயவர்தன மற்றும் தொண்டர் படையணியின் அதிகாரிகள் குழுவும் இணைந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு கலந்து கொண்டதுடன் நடனக் கலைஞர்களின் அணிவகுப்பால் நிகழ்வுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த புதிய கட்டுமானத்திற்கான அர்பணிப்பு மற்றும் திறன்களுக்கு தனது வாழ்த்தினை தெரிவித்தார். இலங்கை இராணுவத் தொண்டர் படையணித் தலைமையகத்தின் பொறியியலாளர்கள் மற்றும் 10 வது இலங்கை பொறியியலாளர் சேவைப் படையணியின் படையினரால் இந்த புதிய நுழைவாயிலை மிக நுணுக்கமாக நிர்மாணித்துள்ளமையையும் பாராட்டினார்.

அதன் பின்னர், புனரமைக்கப்பட்ட இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையக கட்டிடத்தை இராணுவ பதவி நிலை பிரதானி பார்வையிட்டாதுடன் அந்த வளாகத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் கலந்துரையாடினார். வளாகத்தை விட்டு வெளியேறும் முன்பதாக மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையக சிறப்பு விருந்தினர் புத்தகத்தில் தனது எண்ணங்களை பதிவிட்டார்.

சில வருடங்களுக்கு முன்னர் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தலைமையகத்தில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக, இராணுவ வளங்கல் தலைமையகத்திற்கு தலைமையக அலுவலகத்தை மாற்ற வேண்டியிருந்தது. கடந்த இரண்டு வருடங்களில் இராணுவப் படையினரின் அர்ப்பணிப்பினால் முன்னைய இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தலைமையகம் புனரமைக்கப்பட்டு அதன் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளன.